நீங்கள் மோசேயை நம்பினால், நீங்கள் என்னை நம்புவீர்கள், ஏனென்றால் அவர் என்னைப் பற்றி எழுதினார். ஆனால் அவர் எழுதியதை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்வதை எப்படி நம்ப முடியும்?
வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’"என்பது முதன்மையான கட்டளை.