நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் இருள் நிறைந்த வழியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருமே இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த ஒளியைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
இயேசு " மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” என்று கூறுகிறார்.