நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்ற வார்த்தையை உண்மையாக்கும் விதமாக கிறிஸ்து பிறப்புக்காக நம்மைத் தயார் செய்யும் வேளையில் அவரே ஆண்டவர் என்பதை உள்ளூர நம்பி அறிக்கையிடுவோம்.
தன் வறுமையைப் பொருட்படுத்தாமல் திருச்சட்டத்தை மதித்து தனக்கிருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக்கிய ஏழைக்கைம்பெண் அதிகமாகக் காணிக்கை செலுத்திய அனைவரையும் விட சிறந்தவராய் இயேசுவால் பாராட்டப்பட்டார்.
இயேசுவின் அன்பு என்னும் சாட்டையால் இவற்றை அடித்துத் துரத்தும் போது நம் உடல் மனம் ஆன்மா முழுவதும் தூய்மையாகி கடவுள் வந்து தங்கும் இல்லமாக நாம் மாற முடியும்.
அனைத்தையும் தாண்டி கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நாம் இழக்க நேரிட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் மனப்பக்குவம் நமக்குக் கிடைக்கிறது. நம் இன்ப துன்பங்களையும் இழப்புகளையும் சரியான மனநிலையோ
என்னைப் பிறரோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கப் போவதில்லை" என்ற மனநிலை கொண்டவர்களாய் நாம் வாழ வேண்டும். ஆனால் நம் மனநிலையை இயேசுவின் மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து அவரைப் போல வாழ வேண்டும் என்பதே இன்று நமக்கு விடுக்கப்படும் அறைகூவல்.
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.