நம் ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல மற்றும் தீய குணங்களையும் குறிக்கின்றன. நம் அனைவருக்கும் மனதுக்குள் நன்மையும் தீமையும் உண்டு. எனவே, மற்றவர்களை அவசரப்பட்டு நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று தீர்ப்பிடுவதும் கூடாது பொறுமை காக்க வேண்டும்.
இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்களைவிட, சீடர்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார் ஆண்டவர். ஏனெனில், அவர்களின் ஆன்மீகக் கண்களும் காதுகளும் திறக்கப்படுகின்றன கடந்த கால இறைவாக்கினர் தவறவிட்ட விடயங்களை சீடர்கள் அறிந்திட வாயப்புப்பெற்றுள்ளனர் என்கிறார் ஆண்டவர்.
ஒவ்வொரு விதையின் வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பார்க்கலாம்
1.மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வரும் முளை.
2.கதிராக வளர்ந்து வரும் செடி.
3.கதிருக்குள் தானியம் கொண்ட முதிர்ச்சி
இயேசு தன் சீடர்கள் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் சார்பாகக் குரல்கொடுத்தார். அவர் வழியில் உண்மைக்குக் குரல் கொடுப்பதுதான் தலைசிறந்த சீடத்துவம் என்பதை நினைவில் கொள்வோம்.
நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.
தம் போதனைகளைக் கேட்டும், வல்ல செயல்களைக் கண்டும் மனம் மாறாத நகரங்களை இயேசு 'ஐயோ! கேடு!' (நாசமா போவீர்கள்) என்று சாபமிட்டதை அறிந்தோம் அவர் சாபமிட்ட நகர்களும் அவற்றின் மக்களும் அழிந்தனர்.
யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அவர்கள் தன்னை அடிமைத்தனத்திற்கு விற்றதற்காக அவர்கள் மீது கோபப்படவில்லை என்று அவர் விளக்குகிறார். அது கடவுளின் திட்டம் என்கிறார்.
1. இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. இயேசுவோடு அவர்கள் தங்கிக் கற்றிருக்க வேண்டும்.
3. நற்செய்தயை அறிவிக்க இயேசுவால் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆண்டவர் யாக்கோபிடம் சொல்வது போல், ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் நம்மோடு இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதே நமது அழைப்புக்கான வாழ்வு.
யேசுவின் சீடர்கள் நோன்ப் இருக்காகததை அறிந்து, திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அவர்கள் மீது கோபப்படுகிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை நோன்பு நோற்பது யூத பழக்கத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக்காட்டாக, எசா 58:3-7.