அன்பளிப்பு | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
அன்பளிப்பு
அன்பைப் பகிர அற்புத வாய்ப்பு.
அது பெரியதோ சிறியதோ... அளவைப் பொறுத்து அல்ல; அதனுள் பொதிந்திருக்கும் அன்பைப் பொறுத்தே
அறியப்படும்!
வாழ்க்கையே கடவுள் மனிதருக்கு அளித்துள்ள சிறந்த அன்பளிப்பு. அதை எப்படி வாழ்கிறோம் என்பதே நாம் அவருக்கு அளிக்கும் நன்றிநிறை அன்பளிப்பு!
மிகச் சிறந்த அன்பளிப்புகள் இதயத்திலிருந்து வருபவையே; பணம் கொடுத்து வாங்கப்படுபவை அல்ல. உங்கள் அன்பை, பாசத்தை, பாராட்டை, உடனிருப்பை, ஏற்றுக்கொள்ளலை, வழிகாட்டலை அன்பளிப்பாக அளியுங்கள்!
நீங்கள் சிறந்த அன்பளிப்பை வழங்க விரும்பினால்,
உங்களுக்குத் தன்மதிப்பை அளியுங்கள்;
பெற்றோருக்கு மதிப்பை அளியுங்கள்;
முதியோருக்கு ஆதரவை அளியுங்கள்;
உடன்பிறந்தவருக்கு உவகையை அளியுங்கள்;
நண்பர்களுக்குத் தன்னலமில்லா நட்பை அளியுங்கள்;
வறியோருக்குத் தருமத்தை அளியுங்கள்; சோர்வுற்றோருக்கு ஊக்கத்தை அளியுங்கள்; மன அழுத்தத்தில் உள்ளோருக்கு அமைதியை அளியுங்கள்;
அனைவருக்கும் உங்கள் நற்பண்பை அளியுங்கள்!
வாழ்க வளமுடன் நலமுடன்!🤝🔥🥰🌷💐🌹😍
எழுத்து
அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி