கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்
மீட்பு என்பது மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. மனமாற்றம் இல்லையேல் மீட்பு வெறும் பகல் கனவுதான். மனமாற்றத்திற்கு முயற்சி வேண்டும். சக்கேயுவின் முயற்சி அவருக்கு மீட்பதை தேடி தந்தது.
புனித பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரின் கல்லறைகள் மேல் எழுப்பப்பட்ட இந்த இரண்டு பேராலயங்களும் நமது நம்பிக்கை வாழ்வுக்கும் சாட்சிய வாழ்வுக்கும் அடித்தளமாக நிற்பதைப் போல, அவர்களின் வாழ்க்கையும் பணி வாழ்வும் நமது பணி வாழ்வுக்கு உந்துதலாக இருக்கின்றன.
“நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி இறைஞ்சி மன்றாடுவோரின் இறைவேண்டலுக்குக் கடவுள் செவிசாய்க்க மாட்டார?