வத்திக்கான் தலைமைபீடத்தில் மீண்டும் தங்கும் திருத்தந்தை ! | Veritas Tamil

மூன்றாவது மாடியில் அமைந்துள்ள அந்தப் புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில், திருத்தந்தை மூவேளை செப உரையை வழங்குவதற்கான ஒரு தனிப்பட்ட அறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு சிற்றாலயம் ஆகியவை இடம்பெற்றுள்ளன

மார்ச் 14, சனிக்கிழமையன்று, வத்திக்கான் தலைமைபீடத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் குடிபெயர்ந்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ. தனது திருத்தந்தைப் பணியின் தொடக்கத்திலிருந்து அவர் வசித்து வந்த திருப்பீட அலுவலக அரண்மனையிலிருந்து இந்த இடமாற்றம்  நிகழ்ந்துள்ளது.

திருத்தந்தையின் இந்த இடமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.

மூன்றாவது மாடியில் அமைந்துள்ள அந்தப் புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில், திருத்தந்தை மூவேளை செப உரையை வழங்குவதற்கான ஒரு தனிப்பட்ட அறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு சிற்றாலயம் ஆகியவை இடம்பெற்றுள்ளன

முன்னதாக, சாந்தா மார்த்தா இல்லத்தில் வசிப்பதையே விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் அப்போஸ்தலிக்க அரண்மனை இல்லத்தின் கதவுகளில் இருந்த முத்திரைகளை (seals) அகற்றினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மூன்றாவது மாடியில் அமைந்துள்ள திருத்தந்தைக்கான இந்த இல்லத்தில் முதன்முதலில் குடியேறியவர் திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர் (1903–1914) என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வத்திக்கான் செய்தி 

Tamil Survey Popup Image