வேரித்தாஸ் வானொலி தமிழ்ப்பணி

வேரித்தாஸ் வானொலி தமிழ்ப்பணி

தொடங்கப்பட்ட வரலாறு 

கத்தோலிக்க சமயத் திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் ஆசியப் பகுதியில் கத்தோலிக்க வானொலி நிலையம் ஒன்று தேவை என்ற கருத்தை முன்மொழிய, 1958ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கூடிய தெற்காசிய ஆயர்கள், வானொலி நிலையம் ஒன்றை நிறுவ முடிவு செய்தனர்.

1960ஆம் ஆண்டு மணிலா நகரப் பேராயர், ஜெர்மானிய அரசரிடம் வானொலி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு உதவுமாறு வேண்டினார்.1963-ம் ஆண்டில் ஜெர்மானிய அரசு, மணிலா நகரப் பேராயரின் வேண்டுதலை ஏற்று வானொலி நிலையம் ஒன்றைக் கட்டியெழுப்ப உதவி செய்தது. 6 ஆண்டுகள் கழித்து 1969-ம் ஆண்டில் வேரித்தாஸ் ஆசிய வானொலியானது துவங்கப்பட்டது. அதே ஆண்டில் பல்வேறு மொழிகளின் ஒலிபரப்புகள் சோதனை செய்யப்பட்டன. 1976 ஆம் ஆண்டு ஜீலை திங்கள் 12-ம் நாள் தமிழப்பணி வானொலியானது துவக்கப்பட்டது. தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமுகத் தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை அவர்களால் திரு.ம.ஆரோக்கியசாமி அவர்கள் தமிழ்ப்பணியின் முதல் தயாரிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று ஒலிபரப்புகள் ஆரம்பமாகின. தொடர்ந்து தமிழ்ப்பணியின் ஒலிபரப்பில் தனது குடும்பத்தினரையும் இணைத்துக் கொண்டு சுமார் 12 ஆண்டு காலம் தனது அயராத உழைப்பில் தமிழ்ப்பணியை வளர்த்தெடுத்தவர் திரு.ம.ஆரோக்கியசாமி அவர்கள்.

 

Mission / Vision / Objectives of the language service

  • தொலைநோக்குப் பார்வையும் / செயல்திட்டமும்

  • நற்செய்தியை அறிவிக்க

  • உண்மைக்கு சான்றுபகர

  • உண்மைச் செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கி நேயர்களை நெறிப்படுத்தி வழிநடத்த

  • மனித மேம்பாட்டை ஊக்குவிக்க

  • தமிழர்களின் அரசியல் சமூக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க

  • நீதியும் அன்பும் பெருகிட

  • நவீன அறிவியல் மற்றும் முன்னேற்றங்கள், அறநெறிகளுக்கும் நன்னெறிகளுக்கும் விடுக்கும் சவால்களைச் சந்திக்க