இன்றைய விழா நம்மை, புரட்சியைக் கொணர்ந்த புரட்சித்தாயின் பிள்ளைகளாக வாழவும் அழைக்கிறது. இப்புரட்சிமிகு சமூகத்தை முதலில் நம் குடும்பதில் படைக்க விழைவோம்.
தர்மம் செய்யும் போது பெறுபவர்கள் விழிகளில் நன்றி தெரியவேண்டும் என்று கூட எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களே சிறந்த மனிதர். ”தர்மம் தலைகாக்கும். இருப்பதைச் சிறப்புடன் பகிர்ந்து வாழ்ந்தால் போதும், அது நிலைவாழ்வுக்கு வழி காட்டும்.
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்ற மறைநூல் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து திருமணத்தைச் சிறப்பு செய்யும் வகையில் நமது பிள்ளை வளர்ப்பில் நமது கவனம் இருக்க வேண்டும்.
‘பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா’ என்பதில் பொதிந்துள்ள பேருண்மையை மனதில் கொண்டு இயேசுவின் சீடராக வாழ்வோம்.
ஒருவர் ஒருவருக்குத் தோள் கொடுப்போம். நாம் அனைவரும் இயேசுவின் திருவுடலில் அங்கம் வகிக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம். கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வழிவிடுவோம்.
தொண்டு என்பது பொதுமக்களுக்கு தன்னலமின்றி, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்படும் சேவைகள். அதற்கு கூலி தொண்டர்களின் மனமகிழ்ச்சி ஒன்று தான். மாறாக, பட்டமும் பதவிகளும் அல்ல.
பேதுருவைப் போல வருந்தி வருவோரை கைத்தூக்கிவிட்டு, பணியில் அமர்த்துகிறவர் ஆண்டவர் இயேசு என்பதை மனதில் கொள்வோம். இயேசுவின் இறைமக்களை அன்பு செய்து பெணிகாக்க அவருக்கு பணியாளர்கள் தேவை.
நிறைவாக, இயேசுவின் இன்றைய நற்செய்தியில்யில், அவர் தனது தந்தையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பைப்போல, நாம் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் நாமும் தந்தையாம் கடவுளோடு ஒன்றித்திருக்க முடியும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
மண்ணுலகில் வாழ்ந்தாலும், மேலுலகைச் சார்ந்தவற்றையே நாம் நாட வேண்டும் என்பது சீடத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத வேண்டுகோள். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே.
புவுல் அடிகளைப் போல் பெரிய அளவில் முடியாவிட்டாலும் நமது சுற்றுவட்டாரத்தில், நமது கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வால், அன்புப் பணியால் வாழும், உண்மை கடவுளை நம்மால் எளிதாக வெளிப்படுத்த முடியும். இதற்குத் துணிவு தேவை. தூய ஆவியார் துணையின்றி நம்மால் இயங்க முடியாது. எனவே, அவரைப் பற்றிக்கொள்ளவும் அவரால் இயக்கப்பட நம்மை கையளிப்போம்.
கவலை எதற்கும் மருந்தாகாது. சிக்கலான சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினால் சிந்தனை தெளிவுப்பெறும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தன்னமில்லாத எண்ணத்தில் நற்செய்தியாளராக நம்மை நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.