டால்காடோ கொங்கணி அகாடமியை வழிநடத்த அருட்தந்தை மைரன் பாரெட்டோ தேர்வு ! | Veritas Tamil
பிப்ரவரி 22, 2026 அன்று, கோவா மற்றும் டமன் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை மைரன் பாரெட்டோ, ரோமன் எழுத்துமுறையில் கொங்கணி மொழியை முன்னேற்றும் முன்னணி நிறுவனமான **டால்காடோ கொங்கணி அகாடமி**யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
**ரேடியோ வெரிதாஸ் ஏசியா**வுடன் பேசிய அவர், இந்தத் தேர்வு தனது குருத்துவ பணியிலிருந்து தனியே நிற்கும் புதிய பதவி அல்ல; தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் பணி” என்று விளக்கினார்.
கோவாவில் ரோமன் எழுத்துமுறையில் எழுதப்படும் கொங்கணி, கத்தோலிக்க நம்பிக்கையின் உயிருள்ள மொழியாக உள்ளது. இறைவார்த்தை அதில் அறிவிக்கப்படுகிறது; தலைமுறைகள் கடந்த அருட்தந்தையர்களும் பொதுமக்களும் இந்த மொழியின் உயிரோட்டத்தை உறுதிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அகாடமியின் மூலம் ரோமன் எழுத்துமுறைக் கொங்கணியை வளர்த்தல் என்பது ஒரு நிர்வாகப் பொறுப்பு மட்டுமல்ல; நம்பிக்கையை வளர்த்தும் பண்பாட்டு செல்வத்தை காக்கும் முக்கிய பொறுப்பாகவும் அமைகிறது.
இன்று அந்த மரபைத் தொடர்ந்து, அகாடமி தலைவராக மட்டுமல்லாமல், மறைமாவட்டம் நிர்வகிக்கும் நியூ ஏஜ் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மேலாளராகவும் அருட்தந்தை மைரன் பணியாற்றுகிறார். இதை அவர் ஒரு பதவியாக அல்ல; சேவை உணர்வில் பெற்ற பொறுப்பாகக் கருதுகிறார்.
“தலைமை என்பது பதவி குறித்து அல்ல; சேவை குறித்து,” என்றார்.
இறுதியாக , அருட்தந்தை மைரன் பாரெட்டோவில் அவர்கள் கூறுகையில் , கோவா திருஅவை ஒரு உண்மையைப் பார்க்கிறது:மொழி கிறிஸ்துவுக்கும் மக்களுக்கும் செய்யும் ஒரு சேவை என்று கூறினார்.