கடந்த சில நாள்களாக இயேசு தூய ஆவியாரின் வருகையையொட்டி அறிவுறுத்தி வருகிறார். இன்றும், இயேசு தூய ஆவியாரின் வருகையைக் குறித்து எடுத்துச் சொன்னாலும், இங்கு மிகத் தெளிவாக, மிக வெளிப்படையாக, “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்” என்பதை வலியுறுத்துகிறார்.