“பிரின்டானியா விருதுபெற்ற" கத்தோலிக்க அருட்சகோதரி ! | Veritas Tamil

வடஇந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வராணசி நகரில் செயல்படும் கத்தோலிக்க கலாச்சார மற்றும் கலைப் பயிற்சி நிறுவனம் ஒன்று உள்ளது .இசை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட நடன நாடகங்களில்  சிறப்பான பங்களிப்புக்காக ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியை  கௌரவித்துள்ளது.

அருட்சகோதரி புஷ்பாஞ்சலி பால், SSpS, Nav Sadhana Kala Kendra வழங்கும் சிறப்புமிக்க “பிரின்டானியா விருது” பெற்றார். இந்த விருதானது மார்ச் 1, 2026 அன்று நடைபெற்ற “திக்ஷாந்த் சமரோஹ்” (பட்டமளிப்பு விழா) நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களை கௌரவிக்கும் இந்த கலாச்சார நிகழ்ச்சியில் கலை மற்றும் இசைத் துறையின் பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பட்டமளிப்பு பெறும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கண்ட்வா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரி புஷ்பாஞ்சலி, Missionary Sisters Servants of the Holy Spirit (SSpS) என்ற துறவற சங்கத்தின் உறுப்பினர் ஆவார். கல்வியில் சிறந்து விளங்கும் இவர் இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் Pastoral Communication, Art and Spirituality, மற்றும் Fine Arts மூலம் சிகிச்சை வழங்கும் கலைப் பயிற்சி ஆகிய துறைகளில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

அவரது கல்வித் திறமைகளைத் தாண்டியும், அவர் திறமையான இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாடல்கள், பஜன்கள் மற்றும் கீர்த்தனைகளை எழுதியும் இசையமைத்துள்ளார்.

“மங்கள–மேக்லா” (அருளின் நதி) என்ற தலைப்பில் அவர் 15 தொகுதிகளாக ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவை அனைத்தும் “Sadhana-Sanchar Bhopal” என்ற யூடியூப் சேனலில் கிடைக்கின்றன.

மேலும் அவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல நடன நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றி உள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் அவர் கலை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் புனிதரின் நினைவாக ரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் லிட்டர்ஜிக்கல் நடனம் ஆடியுள்ளார்.

இறுதியாக ,நம்பிக்கையும்  கலைக் கண்ணோட்டமும் உள்ள மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் “Sadhana-Sanchar” என்ற கலை, ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் தொடர்பாடல் மையத்தை அவர் நிறுவியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து இசை, நடனம் மற்றும் ஆன்மிக உருவாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.