இரத்தம் உறைந்தார்ப்போல் நின்றாள். தன் பச்சிளம் குழந்தை, பாய்க்கருகில் கிடந்த பாம்பைத் தொட்டுத் தடவிச் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது . 'போய் விடு... என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே...' என்று அமைந்த குரலில் கெஞ்சினாள். பாம்பின் படம் குழந்தைக்கு வியப்பு. தாயின் முகம் குழந்தைக்கு கலக்கம். அதற்குள் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் ஓடி வந்தனர். பாம்பு விரைவாகச் சென்றுவிட்டது.