ஒலிம்பிக் பயணம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

அணுகுமுறைகளே வாழ்க்கையை அமைக்கும். எந்த ஒரு விஷயத்தையும், பிரச்சனையையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தே விளைவுகளும், விடைகளும் கிடைக்கும்.

அன்புமயமான, இரக்க மயமான....

இதுபோன்ற நல்லெண்ண அணுகுமுறைகள் நம்மை வளப்படுத்தும், திடப்படுத்தும், மேம்படுத்தும்.

ஒரு நோயாளி மிகவும் மோசமான உடல் நிலையில் மருத்துவமனையில் இருந்தார். அதே அறையில், சன்னலோரப் படுக்கையில் வேறொரு நோயாளியும் இருந்தார். காலப்போக்கில் இருவரும் நண்பர்களாயினர். படுத்த படுக்கையில் இருந்த நோயாளியை மகிழ்விக்கும் எண்ணத்துடன் சன்னல் அருகில் இருந்தவர், வெளியுலகில் நடப்பவை பற்றி பல மணி நேரம் உயிரோட்டத்துடன் விவரிப்பார்.

ஒரு நாள் வெளியே தெரியும் பூங்காவைப் பற்றி... வேறொரு நாள் அங்கு வரும் பலதரப்பட்ட மக்கள் பற்றி... என்று ஒவ்வொரு நாளும் வர்ணனை கொடுத்துத் தன் சக நோயாளியை உற்சாகமூட்டுவார்.

காட்சிகளைக் ஆனால், நாளடைவில் இந்தத் தீவிர நோயாளிக்குத் தன்னால் இவ்வரிய முடியவில்லையே என்ற ஏக்கமும், ஏமாற்றமும் அதிகமானது. இது முற்றிப் போய்த் தன் சக நோயாளியை வெறுக்கத் தொடங்கினார்.

ஓர் இரவு சன்னல் நோயாளிக்கு மிகுதியான இருமலினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வெறுப்புற்று இருந்த தீவிர நோயாளி இவற்றைக் கவனித்தும், அவர்மீது இருந்த வெறுப்பால் அவசர அழைப்புக்கான விசையை உபயோகிக்காமல் அமைதியாயிருந்தார். இந்த எதிர்மறை சன்னல் வழி எண்ண அணுகுமுறையினால் சந்தோஷத்தை அளித்த நண்பர் இறந்து போயிருந்தார். அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. தனக்கு அந்தச் சன்னலோரப் படுக்கைவேண்டுமென்ற, தீவிர நோயாளியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விரைவாக வந்து அந்த இடத்தை அடையத் துடிக்க, அதுவும் நிறைவேறியது. வந்தவுடன் அந்தச் சன்னல் வழியே வெளியே பார்த்தார். மொத்த நாடியும் ஆடி அடங்கிப் போனது. காரணம் அங்கே அவர் கண்டது வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சுவர் மட்டுமே. தன் முன்னால் அறை நண்பர் தன்னலமற்ற அன்பினால், நேர்மறை எண்ணம் கொண்ட அணுகுமுறையால் நடைபிணமாகக் கிடந்தவருக்குச் சற்று மனமகிழ்வு தரலாமே என்று கற்பனைக் காட்சிகளைத் தானாகவே விவரித்துள்ளார். என்பதை அவரால் உணரமுடிந்தது. தன்னுடைய எதிர்மறை அணுகுமுறை ஓர் உயிரையே எடுத்துவிட்டது என்று மனம் நொந்தார்.

இக்கதையை நினைவுகூறும்போது, நாமும் நம்முடைய எதிர்மறை அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் மகிழ்ச்சியான, முழுமையான வாழ்க்கையைத் தொட...நேர்மறை எண்ணங்கள் கொண்ட அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நேர்மறை அணுகுமுறை இதயத்தை மென்மையாகவும், மூளையைத் திடமாகவும் மாற்றுகிறது. தன் முனைப்பைத் தான் என்ற அகங்காரத்தை, சுயநலத்தை, பிடிவாதத்தை தகர்த்தெறிகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஓட்டுமொத்தச் செயல்பாட்டை கவனத்தில்கொள்ளும்போது, நம்வாழ்க்கை என்பது வரையறையில்லா கால ஓட்டத்தில் கணத்தில் தோன்றி மறையும் மின்மினிப் பூச்சி போன்றதே. ஆதலினால் இவற்றை நேர்மறை அணுகுமுறைகளால் வெற்றி கொள்வோம். எதிர்மறை அணுகுமுறைகள் மனித ஆளுமையைப் பாதிக்கின்றன.

உண்மையான, உறுதியான ஆளுமை என்பது, கடினமானவற்றை எளிமையானதாகவோ, மனம் கசப்பானவற்றை வேடிக்கையானதாகவோ, அல்லது தனக்கு தோன்றிய, தெரிந்த வழியில் செய்வது அல்ல. அந்தச் செயலை நேர்மறை எண்ணம் கொண்ட அணுகுமுறையில்தான் ஆளுமை அடங்கியிருக்கிறது.

நம் வாழ்க்கை முழுவதும் இந்த அணுகுமுறை நிரம்பட்டும். நமது வாழ்க்கையைப் புதிய நிலைக்கு எடுத்துச் செல்வோம். வாழ்க்கை நமக்கு ஒரு சிறு மெழுகுவர்த்தி அல்ல. அது ஒருவகையான சிறந்த கைப்பந்தம். நம் நேர்மறை அணுகுமுறையால் உயரே தூக்கிப் பிடித்துக்கொள்வோம். அதனை எவ்வளவு பிரகாசமாய் எரியச் செய்ய முடியுமோ, அவ்வளவு பிரகாசமாய் எரியச் செய்வோம். நேர்மறை அணுகுமுறைகள் வெளிச்சத்தைப் பொழியட்டும். வருங்காலத் தலைமுறையினரிடம் அந்தக் கைப்பந்தத்தைக் கொடுப்போம். தொடரட்டும் நேர்மறை அணுகுமுறை என்னும் ஒலிம்பிக் பயணம்!