எங்கும் ஆனந்தம், எதிலும் ஆனந்தம் ! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பிரச்சனை நிறைந்தது. அந்த பிரச்சனைகளையும் ஒரு பொருட்டாக கருதாது, அது இறைவன் நம்மை சீர்படுத்த கொடுத்த கொடையாக ஏற்றுக் கொண்டு வாழும்போதுதான் நம்மில் மகிழ்ச்சி நிலைக்கும். 

இறைவன் நமக்கு பிடித்தவர்களுக்கே அதிக பொறுப்புக்களை கொடுக்க, அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறார் என்கிறார் விவேகானந்தர். நம் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நாம் அவற்றை உடனுக்குடன் மறந்துவிடாமல், அது நமக்கு கற்றுத்தந்த பாடத்தை நினைவுப்படுத்திக் கொண்டு, நம்மை பாதிக்காது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்றால் மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாது, நமது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தடையாயிருக்கின்ற வெறுப்பு, எதிர்பார்ப்பு, கோபம் முதலியவற்றை தவிர்த்து உண்மையின் வழியில், நேர்மையின் பாதையில் நாளும் பயணிக்க வேண்டும். 

எனவே எவையெல்லாம் நமக்கு மகிழ்ச்சி தருகின்றதோ அவற்றையெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி வாழ்வோம். நம்மிடம் உள்ள மகிழ்ச்சியை யாராலும் நம் அனுமதியின்றி எடுத்துக் கொள்ள முடியாது. 

பழம்பெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டின், பேச ஆரம்பித்தால் எல்லோரும் நேரம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நிதர்சனங்களையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தெளிவாக எடுத்துச் சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான் என்றே சொல்லலாம். ஐன்ஸ்டின் ஊர் ஊராகச் சென்று சொற்பொழிவு ஆற்றுவார். 

அவர் செல்லும் எல்லா இடங்களுக்கும் அவரது டிரைவரும் செல்வார். ஒரு நாள் டிரைவர் ஐன்ஸ்டினிடம் “உங்கள் சொற்பொழிவைக் கேட்டுக் கேட்டு எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. இன்றைக்கு உங்களுக்குப் பதிலாக நான் சொற்பொழிவு ஆற்றவா?" என்று கேட்டார். அந்த டிரைவர் பார்ப்பதற்கு ஐன்ஸ்டின் போலவே இருப்பார். ஐன்ஸ்டின் சரி என்று சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஐன்ஸ்டின் டிரைவரை, ஐன்ஸ்டின் என்று நினைத்துக் கொண்டு சகல மரியாதைகளுடன் வரவேற்றார்கள்.

 அவரும் மடமடவென்று பேசி முடித்தார். பலத்த கைதட்டல் கிடைத்தது. பேசி முடித்த பின் ஒருவர் வந்து எனக்கு ஒரு சந்தேகம்? அதை நீங்கள் தீர்த்து வைக்க முடியுமா? என்றார். அதைக் கேட்ட ஐன்ஸ்டினுக்கு, டிரைவர் மாட்டிக் கொண்டார் என்று ஒரே சந்தோசம். அதற்கு கேளுங்கள் என்; டிரைவரே இதற்குப் பதில் சொல்வார் என்று ஐன்ஸ்டின் தோற்றத்தில் இருந்த டிரைவர் கூறினார். 

ஐன்ஸ்டின் மேடைக்குக் அழைக்கப்பட்டு சந்தேகத்தைத் தெளிவாக்கினார்.  உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற உண்மையின் மக்களாக வாழ வேண்டும் என்பதை மனதில் இருத்துவோம்.