இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்
ஐந்தாம் நாளில் கடவுள் பறவைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் படைத்தார். தொடர்ந்து, படைப்பின் உச்சக்கட்டமாக கடவுள் ஆறாவது நாளை நில விலங்குகளின் படைப்போடு தொடங்குகிறார்.
நாம் மறுமையில் நிலைவாழ்வுப் பெற்று என்றென்றும் கடவுளுடன் இருக்கும்போது நமது நிலை என்னவாக இருக்கும் என்பதை மண்ணகத்தில் முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ முடியாது.
மத்தேயு இயேசுவைப் பின்செல்ல கடவுளின் அருளே காரணமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் வார்த்தை அவரது ஆன்மாவில் "சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தெளிவை" உருவாக்கி இருக்கக்கூடும்.
புதிய அருளாளர் Giovanni Merlini மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தவர்.
உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.