இயேசு யோனாவை முன்னிலைப் படுத்தி போதிக்கிறார். கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவராக, நினிவே பகுதியில் புறவினத்தார் மத்தியில் இறைவாக்குரைக்க அனுப்பப்பட்டவர் யோனா.
இயேசுவை ஈன்றெடுத்த தாய் இன்று ஒரு பெண்ணால் போற்றப்படுகிறார். அதைக் கேட்ட இயேசுவோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்று மறுமொழியாகக் கூறுகிறார்.
ஆண்டவர் இயேசுவோ, “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?” என்று அவர்களிடம் மறுகேள்வி கேட்டு, தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராகச் சவால்விடுகிறார்.
‘அறிவிலிகள்’ என்று திட்டுகிறார். கலாத்தியாவில் புறவினத்தார் பவுல் அடிகள் வழியாக இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு, நம்பினார்கள், தூய ஆவியானவரும் அவர்களில் பொழியப்பட்டார்.
தம்முடைய சீடர்களிடம் தனிமையில் பேசி, “நீங்கள் பார்ப்பதைக் காணும் உங்கள் கண்கள் பேறுபெற்றவை. பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் செய்வதைப் பார்க்கவும் கேட்கவும் விரும்பினர், ஆனால் அவர்களால் முடியவில்லை என்று நிறைவுச் செய்கிறார்.
கடவுள் நம்மில் என்ன விரும்புகிறார்? இயேசு சொல்வதைக் கேட்டு, அவர் நம்மில் எதை எதிர்பார்கிறார் என்பதை அறிந்துணர நம் செவிகளைத் திறக்க வேண்டும் என்பதாகும்.
என் மீட்பர் வாழ்கின்றார்’ என்றும் இறுதியில் மண்மேல் எழுவார், தன்னை மீட்பார் என்றும் உறுதியோடு, தன் மீட்பர் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையை யோபு இழந்துவிடவில்லை. அவரது இறை அனுபவம் அவருக்கு மன வலிமையைத் தந்தது. இழித்துரைக்கும் நண்பர்களையும் மனைவயையும் அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் (குழப்பம்) கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்’
1. வஞ்சனையும் பொய்யும் அவரை விட்டு அகலச் செய்ய வேண்டும்.
2. அவருக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; அவருக்கு தேவையான உணவை மட்டும் தந்தால் போதும் என்கிறார்.
மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.
கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களில் சிலர் இயேசுவின் உயிர்ப்பை ஏற்கவில்லை. அவர்களை இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்க வலியுறுத்துகிறார் பவுல். இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றதாகும்.
அவரை அழைத்த பரிசேயர் “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். அதை அறிந்த இயேசு, அவருக்குச் சவால் விடுகிறார்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது ஒரு சிறந்த பழமொழி. எல்லாரிடத்திலும் குறைகள் உண்டு. நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் குற்றம் இருக்கும். குற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் உறவோ, நட்போ நீடிக்காது. தனி மரம் தோப்பாவதில்லை. தனித்து வாழ்வதால் நம் இன்பத்துன்பங்களில் யாரும் பங்குகொள்ளப் போவதில்லை.