ஒடிஷாவில் மதமாற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கத்தோலிக்க அருட்சகோதரி மற்றும் மாணவிகள் | Veriats News

2025 ஜூன் 1 அன்று, திருக்குடும்பச் சபைச் சேர்ந்த இளைய அருட்சகோதரி ரசனா நாயக் மட்டும் மாணவிகள், ஒடிசாவின் கோர்தா மாவட்டத்திலிருந்து டெல்லி நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

இந்த பயணத்தின் போது, ஜாட்னியில் உள்ள கோர்தா ரோடு ரயில்நிலையத்தில், பஜரங்க் தள என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து, தவறான முறையில் மதமாற்றம் செய்ய முயன்றதாக அவர்கள்மேல்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதையடுத்து, இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) ஒரு பிரிவான அரசு ரயில்வே காவல் படை (GRPF) இந்தக் குழுவை விசாரணைக்காக ஒரு இரவு முழுவதும் காவலில் வைத்தது.

பஜரங்க் தள உறுப்பினர்கள், இவர்கள் கல்வி என்ற பெயரில் இளம்பெண்களை கடத்தப்படுகிறார்கள் எனக் கூறினர். அவர்களில் ஒருவர்,“தவறான கல்வி வாக்குறுதிகள் மூலம் சில இளம்பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பெர்காம்பூர் நாங்கள் சிலரை அழுது கொண்டிருப்பதை பார்த்தோம். தகவல் கிடைத்தவுடன், ராஜா ராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் S-4 மற்றும் S-5 பெட்டிகளில் இவர்களை கண்டோம். இது பணம், செல்வம் போன்ற ஆசைகளால் மதமாற்றம் செய்யும் திட்டத்துடன் தொடர்புடையது. ஏன் இளம்பெண்களையே மட்டும் அழைத்து செல்கிறார்கள்? ஏன் சிறுவர்களை அல்ல? அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது, பின்னர் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஒடிஷாவில் ஏற்கனவே ஆதர்ஷ வித்யாலயா, நவோதயா, ஸ்மார்ட் பள்ளிகள் போன்ற நன்கு கட்டமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.” எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம், மதச்சார்பற்ற கல்வி வாய்ப்புகளுக்காக பயணிக்கும் மாணவிகள் மீதும் அருட்சகோதரி மீதும் தவறான சந்தேகங்கள் எழுப்பி, மதமாற்றக் குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பினர் பயன்படுத்தும் நவீன நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

“சுதந்திரமான இந்தியாவில், மாணவிகள் மற்றும் அந்த அருட்சகோதரி சித்திரவதை செய்யப்பட்டு, தவறாக மதமாற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்படுவது வருத்தமளிக்கிறது,”  என்று கட்டக்-புவனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் அருட்தந்தை பிரதீப் குமார் பெஹெரா தெரிவித்தார்.

டெல்லியைச் சேர்ந்த  திருக்குடும்பச் சபை மாநில தலைவி அருட்சகோதரி அருணா ஜோஸ், இந்த குழுவைக் காக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.

"GRPF நிலையத்துக்கு நேரில் சென்று, காவலில் வைக்கப்பட்ட பெண்களின் நலனை உறுதி செய்த வழக்கறிஞர்கள் கிளாரா டி’சூசா, சூஜாதா ஜேனா, மற்றும் செவந்தி சோரெங் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்."மதவெறியர்களால் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட போது, அருட்சகோதரி ரசனா மற்றும் இளம் பெண்கள் காட்டிய விசுவாசமும் துணிவும் சிறப்பிக்கத்தக்கவை."

Tamil Survey Popup Image