400 ஆண்டுகளை கடந்த புனித பேதுரு பேராலயம் ! | Veritas Tamil

ரோமில் உள்ள புனித பேதுரு பேராலயம் அர்ப்பணிக்கப்பட்டு 400 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நினைவுநாளை முன்னிட்டு வத்திக்கான் பல சிறப்பு முயற்சிகளை தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பயணிகள் எளிதில் நுழைய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு முன்பு மூடப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன; மேல்தளத் திறந்த வெளி விரிவுபடுத்தப்பட்டுள்ளது; மேலும் ரோமில் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பாதையைப் பின்தொடரும்  திருப்பயண பாதையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் பிப்ரவரி 20 அன்று தொடங்கி, நவம்பர் 18 அன்று திருத்தந்தை தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் நிறைவடையும்.

ஆனால் இந்த கொண்டாட்டங்களின் மையத்தில்
“பீட்டர் இங்கே இருக்கிறார்” — உண்மையான இடம், உண்மையான மனிதர் என்ற  ஒரு எளிய வாசகம் இடம் பெற்றுள்ளது.

1626 நவம்பர் 18 அன்று இன்றைய பேராலயம் விழாவாக அர்ப்பணிக்கப்பட்டது. இது நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டண்டைன் பேரரசர் கட்டிய ஆலயத்தை மாற்றி அமைக்கப்பட்டது. 

மேலும், நூற்றாண்டுகளாக பேதுருவின் கல்லறையின் துல்லியமான இடம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 20ஆம் நூற்றாண்டில் பேராலயத்தின் அடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இதை உறுதிப்படுத்தின. அந்தக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, ஆரம்பகால கிறிஸ்துவர் ஒருவர் துன்புறுத்தல்களின் காலத்தில் இரகசியமாக பொறித்திருக்கக்கூடிய எளிய எழுத்துகள் மட்டும்  இருந்தது.

இறுதியாக, வரலாற்று பெருமைமிக்க தருணமாக  400ஆம் ஆண்டு நினைவின் ஆழ்ந்த அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்வு  அமைகிறது .

 

Tamil Survey Popup Image