சிறுவயதிலேயே தாய்மை உணர்வு | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மாலையில் பள்ளி விட்டதும் ஒரே ஓட்டமாக மருத்துவமனைக்குச் சென்றாள் 10 வயது மாலா. நேராக அம்மாவின் படுக்கையருகே சென்று பார்த்தபோது, புதிதாகப் பிறந்திருந்த பெண் குழந்தை ஒன்று அம்மாவுக்கருகே தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்க்காமல், ஒவ்வொருவரும் மாலாவின் முகத்தையே பார்த்தனர். தனக்குப் போட்டியாக இன்னொரு குழந்தை வந்துவிட்டதை மாலா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள் என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, முகத்தில் பெருமகிழ்ச்சியை வெளியிட்ட மாலா, 'அம்மா, நான் தங்கச்சிப் பாப்பாவைத் தூக்கலாமா?' என்று கேட்டாள்.

'இப்போது வேண்டாம், வீட்டிற்குப் போன பிறகு நீயே பக்கத்தில் வைத்துப் பார்த்துக்கொள்', என்று கூறினார்.

"இன்னொரு பொம்பளப் பிள்ளையைப் பெற்றுவிட்டாயா!, இப்போதே உன் மூத்த மகளுக்குப் பொறாமை தலைத் தூக்கும் பாரு" எனத் தன் மாமியார் கூறியதும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததும், இப்போது அத்தாயின் நினைவில் வந்தது."அத்தை, என்ன இருந்தாலும், பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே தாய்மை உணர்வு பிறந்துவிடுகிறது. எந்த ஆண் பிள்ளையாவது, 'பார்பி' பொம்மையை வைத்து விளையாடுவதைப் பிள்ளைகளுக்குத்தான் அது பிடிக்கும். அப்பொம்மைகளைக் குளிப்பாட்டி, பார்த்திருக்கிறீர்களா? பெண் சோறூட்டி, உடை உடுத்தி வைப்பதை எந்த ஆண் குழந்தையாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதனால்தான் சொல்கிறேன், தனக்குப் பின் பிறக்கும் தம்பி தங்கைகளைப் பெண் பிள்ளைகள் போட்டியாக ஒருநாளும் நினைப்பதில்லை. என் மகளும் அப்படி நினைக்க மாட்டாள்" என அந்தத் தாய், தன் மாமியாரிடம் கூறியதை, நிரூபிப்பதாக மாலாவின் செயல்கள் இருந்தன.

தாய்மை என்பது உலகின் மிகப்பெரிய வாழ்க்கை சக்தி.

இது மிகப்பெரியது மற்றும் பலமானது.

இது எல்லையற்ற நம்பிக்கையின் செயல்