தாயாக மாறிய அக்கா | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
பள்ளி முடிந்ததும் வேக வேகமாக ஓடினாள் அச்சிறுமி. 5 ஆம் வகுப்புப் படிக்கும் அந்த 10 வயது சிறுமி, ஐந்தே நிமிடத்தில் வீட்டை அடைந்து, பாத்திரங்களைக் கழுவி, பின், தன் இரு தம்பிகளுக்கும் உடம்பைத் துடைத்து, தான் காலையில் செய்து வைத்துவிட்டுப்போன கேழ்வரகுக் கஞ்சியைக் குடிக்கக் கொடுத்தாள்.
இந்தச் சிறுமியின் தந்தை இவர்களை விட்டுச் சென்று நான்கு படுக்கையாகிவிட்டார். அம்மாவின் அருகில் சென்று பார்த்தார் அந்தச் ஆண்டுகளாகிவிட்டன. கடந்த இரண்டாண்டுகளாக அம்மாவும் படுத்த சிறுபி, இவளைக் கை நீட்டி அருகே அழைத்து, அணைத்து, தலையை வருடிக் கொடுத்தார் அந்தத் தாய்.
தன் இயலாமையை எண்ணி, அந்தத் தாயும் அழுது கொண்டிருப்பார் !
தனக்கிருக்கும் ஒரு சிறு வயலையும் குத்தகைக்கு விட்டு, அதில் வரும் சிறு வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 'ஏனம்மா அழுகிறீர்கள்?" எனக் கேட்டாள் அந்தச் சிறுமி. "இல்லையம்மா, இந்தச் சின்ன வயதிலேயே உன்னை இவ்வளவு பெரிய பொறுப்புகளைச் சுமக்க வைத்துவிட்டேனே?" என மேலும் கண்ணீர் விட்டார் அத்தாய். "தாய்க்கும், தம்பிகளுக்கும் உதவுவது சுமையல்ல, அது சுகம்தான்” எனப் பெரிய மனுஷி போல் கூறிய அச்சிறுமி, தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள். இங்கு, தாய் மகளாகவும், மகள் தாயாகவும் மாறிப்போனார்கள்.
தங்கத்தில் கட்டில் இருந்தாலும்
அம்மாவின் மடியில் உறங்குவது போல் வராது!
"தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை."
-மறைந்த காஞ்சி பெரியவர்