இந்தியாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் ஆதிகரிப்பு.

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக புது தில்லியை தளமாகக் கொண்ட ஒரு கிறிஸ்தவ அமைப்பான யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் (UCF) கூறுகிறது.UCF என்பது நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்களை ஆவணப்படுத்தும் ஒரு மதப்பிரிவுகளுக்கு இடையேயான கிறிஸ்தவ அமைப்பாகும். இது முக்கியமாக போராட்டங்கள் மற்றும் பிற ஜனநாயக வழிமுறைகள் மூலம் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு.

"இந்த ஆண்டு, 2025, ஜனவரி முதல் மே வரை, 313 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நம் நாட்டில் ஒரு நாளில் இரண்டுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்," என்று ஜூன் 18 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் UCF இன் தேசிய ஒருங்கிணைப்பாளர் AC மைக்கேல் கூறினார்.“யூசிஎஃப் உதவி மைய தொலைபேசி எண் (1800-208-4545) வழியாக பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் 127 தாக்குதல்களாக இருந்து 2024ஆம் ஆண்டில் 834 தாக்குதல்கள் வரை அதிகரித்திருப்பது மிகுந்த சோகமளிக்கக்கூடியது,” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமையை அரசியல் விருப்பமும், அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கையும் உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்திய கிறிஸ்தவ சமூகம் தங்கள் அடையாளம் மற்றும் இருப்பை விரைவில் இழக்கும் அபாயம் உள்ளது என்று டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான மைக்கேல் விளக்கினார்.

“உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் தற்போது இருக்கும் வெறுப்பான பிரச்சாரம், கொடூரமான கூட்டத்தாக்குதல் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் முக்கிய மையங்களாக மாறியுள்ளது. இதில் சட்டமும் நீதியும் சம்பந்தப்பட்ட சில அமைப்புகள் உடந்தையாக செயல்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.பல ஆலய தலைவர்கள், குடிமக்கள் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறையைப் பற்றி கவலை மற்றும் வேதனை தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மன அழுத்தத்துடனும், பீதியுடனும் வாழ்கிறார்கள் என்று கூறினார்.

கிறிஸ்தவர்களால் சிலர் மதம் மாற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்படுவது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.“கிறிஸ்தவர்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு மிகப்பெரியதாகவே கூறப்படுகிறது,” என்று மைக்கேல் விளக்கினார்.

2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம், வலுக்கட்டாய மதமாற்றங்கள் குறித்த தகவல்களை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கோரியிருந்தது. ஆனால் இன்றுவரை எந்த அரசுவும் இதற்கு ஆதாரமான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.2012இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் 140 கோடி மக்களுள் கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதம் ஆகவே உள்ளனர்.

Tamil Survey Popup Image