வெற்றி நமக்குள்ளே | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

* வெற்றி என்பது வெளியில் இல்லை. விதைக்கும்நோக்கி இருக்கிற போல விருட்சம் நமக்குள் குடிகொண்டிருக்கிறது. விதையானது முட்டி மோதிய மேலே எழும்பிப் பாந்து விரியும்போது கிடைப்பது வெற்றி என்னும் மாம். அதன் நிழலால் நமக்குக் கிடைப்பது மகிழ்ச்சியும் மலர்ச்சியும்.

கோதுமை மணியானது (விதை) மண்ணில் புதையுண்டது. துன்பம், வறுமை, நோய், வேதனை சோதனை, தோல்வி எல்லாவற்றிற்கும் மேலாக சாவு இவற்றுடன் முட்டி மோதி மேலே எழும்பி, உயிர்ப்பைத் தந்தது. வெற்றியைத் தந்தது. கோதுமை மணியாகிய கிறிஸ்து மண்ணுக்குள் புதைந்து, மடிந்து பின் சுல்லறைப் பிளக்கப்பட்டு உயிருடன் எழுந்தார். இதுதான் வெற்றி இந்த வெற்றி நம் மனங்களில் மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும், நிலைத்த அமைதியையும் ஊற்றெடுக்கச் செய்கிறது. உயிர்ப்பின் செய்தி 'அமைதி'. வெற்றி ஆர்ப்பரிப்பிடையே அமைதி அரசாள்கிறது. ஆனால், பல்வேறு விதமான உலகச் செயல்பாடுகளால் நம் உள்ளத்தின் வெற்றியையும், அதன் செய்தியான அமைதியையும் புதைத்து விடுகிறோம். வெற்றியை வெளியே தேடித் தேடி அமைதியை இழக்கிறோம்.

எந்நிலையிலும் தனக்கு வெற்றி வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவன், அதைத் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்தான். வழியில் ஒரு ஞானியைக் கண்டாள். அவனுக்குள் அளவில்லா மகிழ்ச்சி. எல்லாம் தெரிந்த அவர் தன்னுடைய வெற்றிக்கும் வழி சொல்வார் என்ற நம்பிக்கையில், அவரிடம் 'வெற்றியை அடைய நான் எந்த வழியில் செல்லவேண்டும்?" என்று கேட்டான். அந்த ஒன்றும் போாது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கித் தன் நீட்டி, ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டினார். உடளே பேரார்வம் இல்லை உந்தித்தள்ள, ஞானி குறிப்பிட்ட திசையில் அந்த இடத்தை ஓடினான். திடீரென்று மிகப் பெரிய சத்தம் கேட்டது.
அந்த மனிதன் பின்னுக்குத் தள்ளப்பட்டு நிலைருவைந்து கீழே அழுக்கான் உடலெங்கும் காயங்கள்.. தட்டுத்தடுமாறி எழுந்தான். ஞானி சொள்ள செய்தியை நாம்தான் தவறாகப் புரிந்துகொண்டோம் என்று நினைத்து மீண்டும் அவரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டான்.
-
ஞானியிடமும் அதே அமைதி... மீண்டும் அதே பதில், அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, மீண்டும் அதே இடத்தை நோக்கி விரைந்தான். இந்த முறை அந்த 'சத்தம்' அவனைச் செவிடாக்கியது. மீண்டுமாக கீழே தள்ளப்பட்டான். உடல் முழுவதும் இரத்தக்காயங்கள். ஆடைகளும் கிழிந்தன. கோபம் கொண்டவனாக மீண்டும் ஞானியிடம் வந்து ஆத்திரத்தோடு அதே கேள்வியைக் கேட்டுவிட்டு, "நீர் எதையும் கட்டிக்காட்டத் தேவையில்லை. நீர் காட்டிய இடத்தில் வெறும் சத்தமும், பேரிடியும் கேட்டன. அதனால் என் உடலெங்கும் காயங்கள். எனவே, உம் வாயைத் திறந்து பதில் சொல்லும்" என்றான்.
அப்போது ஞானி சொன்னார்: “வெற்றி அந்த வழியில்தான் உள்ளது. அந்த விபரீத சத்தத்திற்கும் சற்று அப்பால்... அந்த சத்தங்களைக் கடந்து அமைதிக்குள் சென்றால் மட்டுமே நீ வெற்றியைக் காண்பாய்."
வெற்றி அமைதிக்குள் குடிகொண்டிருக்கிறது...
உண்மை வெற்றியின் வெகுமதி உள்ள அமைதி....
அந்த அமைதிக்குள்தான் வெற்றியும் புதைந்து கிடக்கிறது.
ஆம். உண்மையான அமைதி நம் உள்ளங்களில் உறைந்து கிடக்கிறது. இவற்றை உணராமல் வெற்றியை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம். நமக்குள்ளே இருக்கும் இவற்றை வெளிக்கொணர்வோம்..
வெளியே தேடுவதில் அர்த்தமில்லை பயனுமில்லை.
 

Daily Program

Livesteam thumbnail