விண்ணகம் சென்றார் வேரித்தாஸின் ஜெரோம் | Rest in Peace, Fr. Jerome
தஞ்சை மறைமாவட்ட அருட்தந்தை மு.ஜெரோம் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு, வேரித்தாஸ் வானொலியின் கண்ணீர் அஞ்சலி!
மண்ணில் 20-07-1968 விண்ணில் 30-07-2026
நீ தஞ்சை தரணியின் தரமான அருட்குரு
உன் மறைவால் சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் கண்ணீர் வடிக்கிறது
உன் சிரித்த முகமும் நகைசுவை பேச்சும் மறக்கமுடியாதது
உன்னை 2008 ஆம் ஆண்டு ரேடியோ வேரித்தாஸிற்கு விமானம் ஏற்றியது சாந்தோம் நிலையம்
வேரித்தாஸின் வேர்களில் நீயும் சேர்ந்தாய்
சிற்றலைகளில் உனது குரல் தீயாய் ஒலித்தது
அன்றாட செய்திகளை அக்கறையோடு வாசித்தளித்தாய்
நாட்டு நடப்பை நிகழ்ச்சியாக்கினாய்
உண்மை ஓங்ககுவதற்கு உறுதியாய் நின்றாய்
இனிய இதயங்களிடத்தில் இனிமையோடு பேசினாய்
எளியோருக்கு இறங்கினாய் இன்முகத்தோடு பழகினாய்
ஆண்டவரின் நற்செய்தியை சுவைகளோடு அறிவித்தாய்
விண்ணரசில் உன் மறைப்பணி தேவை இருப்பதால்
விண்ணக அரசன் உன்னை அழைத்தார் போலும்
போய் வா...
ஒன்று மட்டும் நினைவில் கொள் !
எங்களுக்காக ஜெபிக்க மறவாதே !
அன்புடன்
வேரித்தாஸ் தமிழ்ப்பணி
சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம்
சென்னை.4
