போரின் வலி | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
போர்
மனசாட்சியில்லா மனிதர்களின் மனங்களில் உருவாகி,
மாபெரும் அழிவைக் கொணரும் கொடிய விடம்.
மனிதர்கள் பகுத்தறிவு உள்ளவர்கள்தானா என வினா எழுப்பச் செய்யும் மனிதநேயமற்ற செயல்!
போரைத் தொடங்குவது எளிது; ஆனால், அதை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் கடினம்.
போரை விரும்புபவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் ஏற்றுக்கொள்ளவியலா பரிதாபம்!
போரைத் தொடங்குபவர்கள் போரில் ஈடுபடுவதில்லை; போரில் ஈடுபடுபவர்கள் போரை ஒருபோதும் விரும்பியதில்லை!
'கண்ணுக்குக் கண்' என்பது மனிதர் அனைவரையும் பார்வையற்றவர்களாய் அல்லவா மாற்றிவிடும்!
பிறகு ஏன் இந்தப் பாதகமான பழிவாங்கல்? வீணான வன்முறை? வறட்டு கவுரவம்?
போரின் பெருமை யாருக்கு வேண்டும்?
போரில் சிந்தும் இரத்தம் எழுப்பும் கூக்குரல் யார் காதில் ஒலிக்கிறது?மன்னர்கள் காலத்து ஆக்கிரமிப்புகளும் அடிமைத்தனங்களும் அச்சுறுத்தல்களும் இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்வது ஏனோ?!
ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கு
அப்பாவி மக்கள் பலியாவது ஏன்?
அணு ஆயுதங்கள் அமைதியைக் குலைப்பது ஏன்?
போர் மேகங்கள் கலையட்டும். அமைதி மழை பொழியட்டும்!
வாழ்க வளமுடன் நலமுடன் 🤝🤝🌷🌷🌹🌹🤍🤍☘️☘️🍀🍀