“என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவான் 16:33)
இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார்.
இருண்ட அவர்களது உள்ளம் ஒளியை ஏற்க மறுக்கிறது. ஆதலால், யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிடுகிறார்கள்.
தாவீது கடவுளின் அழைப்புக்கு ஏற்ப அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தார் என்றும் ஆனால், அவரது வழிமரபில் வந்தவர்களோ அவ்வாறு கீழ்ப்படிந்து வாழவில்லை என்றும் வாசிக்கக் கேட்டோம்.
அவர் தொடர்ந்து, இயேசுவை நம்புவதானது, தந்நையாம் கடவுளை நம்புவதாகும் என்கிறார். ஆம், “என்னை நம்புகிறவன் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பினவரையும் (தந்தை தேவனை) நம்புகிறான்”