“உமது வார்த்தைப்படியே எனக்கு ஆகுக” கிறிஸ்தவராக இருப்பது வெறுமனே திருமுழுக்கு பெற்றிருப்பதோ, திருப்பலியில் பங்கேற்பதோ மட்டும் அல்ல. இறைவார்த்தையை கேட்டு, அதை நமது அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதுதான் உண்மையான சீடத்துவம் என்பதற்கு அன்னை மரியா நமக்கு முன்மாதிரியாக உள்ளார்.
“என்னைப் பின்பற்றி வா”...கிறிஸ்துவில் நாம் பெற்ற அழைப்பை மத்தேயுவைப் போல் உண்மையாக வாழ்ந்து, அன்பிலும் ஒருமைப்பாட்டிலும் வளர்ந்து, கடவுள் கொடுத்த வரங்களைப் பயன்படுத்தி மற்றவர்களையும் கட்டியெழுப்ப முற்படுவோம்.