இயேசுவின் அழைப்பு – வாழ்க்கையை மாற்றும் அழைப்பு!| ஆர்.கே.சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 25-ம் வாரம்-திங்கள்
21 செப்டம்பர் 2026
புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர்-விழா


எபேசியர் 4: 1-7, 11-13
மத்தேயு 9: 9-13


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், கிறிஸ்துவில் அழைக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அந்த அழைப்புக்கு ஏற்றவாறு வாழ வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். நம்பிக்கையாளரகள் தாழ்ச்சி, அமைதி,  பொறுமை மற்றும் அன்புடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, தூய ஆவியார் அருளும்  ஒருமைப்பாட்டை அமைதியின்  மூலம் காத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

தொடர்து. நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கும் மக்க்  ள என்றும்,  ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர் என்ற கிறிஸ்தவ நம்பிக்கையை வலியுற்துகிறார். 


 ந்நிறைவாக, கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வரங்களையும் பணிகளையும் அளித்துள்ளார் என்பதோடு,  திருத்தூதர்கள்  இறைவாக்கினர் நற்செய்தியாளர்கள், ஆயார்கள் மற்றும் போதகர்கள்  ஆகியோரின் முதன்மையான  பணி, இறைமக்க்ளை மறை பணிக்குத்  தயார்படுத்தி, கிறிஸ்துவின் திருவுடலாகிய திருஅவையை  கட்டி எழுப்புவதோடு,  இறைமக்களில்,  இயேசு கிறிஸ்துவைப்  பற்றிய அறிவு முதிர்ச்சியை நோக்கி வள,்ச்சி அடைவதாகும்  என்று முடிக்கிறார் பவுல்,


நற்செய்தி.


இந்தப் பகுதியில், இயேசு மத்தேயு என்ற சுங்கத்துறையில்  வரிவசூலிப்பவரை தம்மைப் பின்பற்ற அழைக்கிறார். மத்தேயு உடனே எழுந்து இயேசுவைப் பின்பற்றுகிறார். பின்னர், இயேசு வரிவசூலிப்பவர்களுடனும் பாவிகளுடனும் உணவருந்துகிறார். இதைக் கண்ட பரிசேயர்கள், “இயேசு ஏன் இப்படிப்பட்டவர்களுடன் உணவருந்துகிறார்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, நோயுற்றவர்களுக்குத்தான் மருத்துவர் தேவைப்படுவது போல, பாவிகளுக்கும் அவர்களின் மீட்புக்கும் மருத்தவர் தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறார்.


இயேசு மேலும், “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்ற கடவுளின் வார்த்தையின் அர்த்தத்தை உணரும்படி கூறுகிறார்.


சிந்தனைக்கு.


இன்று நற்செய்தி நூல்களை எழுதிய நால்வரில் ஒருவராகிய புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். 

புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவரும், மத்தேயு நற்செய்தியின் ஆசிரியராகவும் அறியப்படுகறார். மத்தேயுவின் பழைய பெயர் லேவி என்று மாற்கு 2:14 மற்றும் லூக்கா 5:27 குறிப்பிடுகின்றன. இவர் கலிலேயா கடலோரம் இருந்த கப்பர்நாகூம் பகுதியில் கடல் வழியாக வருவோரிடம் உரோமை அரசுக்காக  வரிவசூலிப்பவராக இருந்தார். இவர் ஒரு யூதர். 


வரிவசூலிப்பவர்கள் அக்காலத்தில் பொதுமக்களால் பெரும்பாலும் பாவிகளாகவும், ரோம ஆட்சியுடன் தொடர்புடையவர்களாகவும் கருதப்பட்டனர்.  யேசு அவரைக் கண்டபோது, “என்னைப் பின்பற்றி வா” என்று அழைத்தார். மத்தேயு உடனடியாக எழுந்து இயேசுவைப் பின்பற்றினார் (மத் 9:9). பின்னர் மத்தேயு தனது வீட்டில் இயேசுவுக்கு விருந்து அளித்தார். வரிவசூலிப்பவர்களும் பாவிகளும் அங்கு இருந்தனர். இதன் மூலம் இயேசுவின் இரக்கமும், பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைக்கும் அன்பும் வெளிப்படுகின்றன எனலாம். இவரே இயேசு கிறிஸ்து யார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் பழைய ஏற்பாடோடு தொடர்புபடுத்தி (முதல் அதிகாரம்) நற்செய்தி எழுதினார். 


ஆம், இயேசு தம் பணிக்கு  தகுதியற்றவர்கள் என்று நினைப்பவர்களையும் அன்புடன் அழைக்கிறார். அவருடைய அழைப்பு மனந்திரும்பி அவரைப் பின்பற்றுவதற்கானது. தமது கடந்த கால வாழ்வைத் துறந்து, இயேசுவின் அழைப்பால் மனமாறியதன் வெளி அடையாளமாக இயேசுவை விருந்துக்கு அழைத்து விருந்து பரிமாறியதை அவரே தம் நற்செய்தியில் குறுப்பிடுகிறார்.


ஆகவே, இன்றைய விழாவை வழக்கமாக வந்து போகும் விழாவாக்க் கருதாமல், மத்தேயுவின் வாழ்க்கை, கடவுளுடைய அழைப்பு எந்த மனிதரையும் மாற்ற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்.   திருத்தூதராக மத்தேயுவின் அழைப்பிலிருந்து  நாம் கற்றுக்கொள்வது “கடந்த காலம் எப்படியிருந்தாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின்பற்றும் போது வாழ்க்கை புதிய பாதையில் செல்லும் என்பதாகும். 


முதல் வாசகத்தில் பவுல் அடிகள வலியுறுத்துவதைப் போன்று, கிறிஸ்துவில் நாம் பெற்ற அழைப்பை மத்தேயுவைப் போல்  உண்மையாக வாழ்ந்து, அன்பிலும் ஒருமைப்பாட்டிலும் வளர்ந்து, கடவுள் கொடுத்த வரங்களைப் பயன்படுத்தி மற்றவர்களையும் கட்டியெழுப்ப முற்படுவோம். 


இறைவேண்டல். 


ஆண்டவரே, “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்ற உமது வார்த்தையை என் வாழ்க்கையில் செயல்படுத்த எனக்கு அருள் தாரும். ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image