“பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்
‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்பதைத் தெளிவுப்படுத்தி, இயேசுவை மணமகனாகவும், தன்னை மணமகனின் தோழனாகவும் தாழ்த்திக்கொள்கிறார்.
‘அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்கிறேன்’ என்று நாளும் பொழுதும் முழங்குபவர் ஒரு பொய்யர் என்று யோவான் குறிப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும்.
உலகமும் மனுக்குலமும் தோற்றுவிக்கப்பட நாள் முதல், கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. அப்படியிருக்க, கடவுள் அவரது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம்
பாவம் செய்து வாழ்பவர்கள் அலகையைச் சார்ந்தவர் என்கிறார். நாம் கடவுளிடமிருந்து வந்தவர்களாயின் கடவுளின் திருவுளத்திற்கு எற்ப வாழ வேண்டும் என்பதை யோவான் வலியுறுத்துகிறார்
இயேசு, ‘கிறிஸ்து’ என்பதை ஏற்க மறுப்பவர் என்றும் கிறிஸ்துவுக்கு எதிரானவர் ஆவார். இயேசுவே கிறிஸ்து என்று பறைசாற்றுபவர்கள் இயேசுவுக்கும் தந்தைக்கும் உரியவர்கள்
இன்று ஆண்டின் தொடக்க நாள். இந்நாளை திருஅவை அன்னை மரியா இறைவனின் தாய் எனும் மறை உண்மையைக் கொண்டாடி மகிழ்கிறது. கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவைக் குறித்து வரையறுக்கப்பட்ட நான்கு கோட்பாடுகள் உண்டு. அவற்றில் முதலாவது மரியா இறைவனின் தாய் என்பதாகும். இக்கோட்பாடு கி.பி. 431-ல் இயற்றப்பட்டது.
ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்ற செய்தியை மலாக்கி வழங்குகின்றார்.
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?வேறு உரையாடல்கள் நிகழ்ந்ததாகக் குறுப்புகள் இல்லை. ஆனால், உடனே 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என்று எலிசபெத்து ஆச்சரிந்த்துடன் கேட்கிறார்.
நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அடிமை நிலைக்குத் தன்னைத் தாழ்த்திய மரியா, தன் தாழ்ச்சியின் வழியாகவே தாவீதின் திறவுகோலின் தாயாக மாறுகின்றார்.
குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்
நாம் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் கவனம் செலுத்துகிறோம். எலியா இறைவாக்கினர் அற்புதமாக விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால், ஆண்டவரின் நாளுக்காக மக்களைத் தயார்படுத்துவதற்காக அவர் உலகம் அழியும் முன் திரும்பி வருவார்