'மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு' (மாற்கு 1:22) இயேசுவின் செயல்கள் வெளிபட்டதால் தீய ஆவிகள் வெகுண்டன. மனிதருக்குள், சுகமாக உறங்கிக்கிடந்த தீய ஆவிகள் இயேசுவை எதிர்க்கத் துணிந்தன.
அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.