ஒடிசாவிலிருந்து முதல் ICYM தேசியத் தலைவராக அமித் தேவ் – வரலாற்றுச் சாதனை| Veritas Tamil

இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (ICYM), ஒடிசா மாநிலத்தின் ராயகடா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அமித் தேவ் அவர்களை தனது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், கிழக்கு இந்தியாவின் மறைபரப்புச் மாநிலமான ஒடிசாவிலிருந்து ஒருவர் முதன்முறையாக தேசிய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். 

இந்தத் தேர்தல், 2026 ஜனவரி 26 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலி நகரில் நடைபெற்ற ICYM தேசியக் குழு (National Council) கூட்டத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், CCBI இளைஞர் ஆணைக்குழு தலைவர் பேராயர் இக்னேஷியஸ் டி’சௌசா, ICYM இணை இயக்குநர் அருட்தந்தை ஜோஹன் பார்மன், மேலும் 14 மாநிலங்களிலிருந்து  வந்த இளைஞர் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தன் பயணத்தை நினைவுகூர்ந்த அமித் தேவ், திருச்சபைத் தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளிடமிருந்து பெற்ற ஊக்கமும் வழிநடத்தலும் குறித்து நன்றியுடன் பகிர்ந்தார்.“என் இளைஞர் பணிக்கான அழைப்பை வடிவமைக்க பல வழிகாட்டிகள், அருட்தந்தையர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அவர்களின் ஊக்கமும் வழிநடத்தலும் எனக்கு பெரும் ஆதாரமாக இருந்தது,” என்று அவர் கூறினார். குறிப்பாக, ICYM தேசிய இளைஞர் இயக்குநர் அருட்தந்தை சேதன் மச்சாடோ அவர்களை, தேசிய அளவிலான இளைஞர் பணிக்கான பரந்த பார்வையைத் தன்னுள் விதைத்ததற்காகவும், தேசிய மட்டத்தில் சேவை செய்யும் உறுதியை வலுப்படுத்தியதற்காகவும் அவர் பாராட்டினார்.

மேலும்,  இணை இயக்குநர் அருட்தந்தை விக்னான் தாஸ், CCBI துணை பொதுச் செயலரும் இயக்குநருமான அருட்தந்தை ஸ்டீபன் ஆலதாரா, இணை இயக்குநர் சகோதரி மார்கரீட்டா டயஸ் ஆகியோருக்கும் அவர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.“அவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டல், ஊக்கம் மற்றும் தனிப்பட்ட துணைநடத்தல், என்னை ஆன்மீகமாகவும் தலைவராகவும் வளரச் செய்தது. அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு என் பயணத்தில் உண்மையான தூணாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

ராயகடா உள்ளூர் திருச்சபைத் தலைமையிலிருந்தும் பெற்ற ஊக்கத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அதில், ராயகடா பேராயர் அபொலினாரியஸ் செனபதி, CM; விகார் ஜெனரல் அருட்தந்தை சாந்தி சந்தன் பாணி; மற்றும் ராயகடா ‘க்வீன் ஆஃப் த மிஷன்’ பேராலய பங்கு ஆசாரியர் அருட்தந்தை அபேதா கோரா ஆகியோர் அடங்குவர்.

தன் பார்வையைப் பகிர்ந்த புதிய தேசியத் தலைவர்,
“என் நேரமும் திறமைகளையும் பயன்படுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி, ஒன்றுபாடு மற்றும் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பு செய்ய விரும்புகிறேன்—குறிப்பாக இளைஞர்களுக்கு சேவை செய்வதன் மூலம், அன்பு, சேவை மற்றும் பொறுப்பில் வேரூன்றிய ஒரு திருச்சபையை உருவாக்க வேண்டும்,” என்றார்.

மேலும் அவர்,“இந்திய கத்தோலிக்க இளைஞர்கள் உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்தவர்களாக, பணிமுனை நோக்குடன் வாழ வேண்டும் என்பது என் கனவு—கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றி, திருச்சபை வாழ்வில் செயலில் ஈடுபட்டு, ஒன்றுகூடல் (Synodality), பங்கேற்பு மற்றும் பணி ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்,” என்று கூறினார்.

இந்தத் தேர்வை வரவேற்ற ராயகடா மறைமாவட்ட விகார் ஜெனரல் அருட்தந்தை சாந்தி சந்தன் பாணி,“இது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; ஓரங்கட்டப்பட்டதாகக் கருதப்பட்ட சிறிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளிலிருந்தும் வரும் இளைஞர் தலைமைகள் இப்போது காணப்பட்டு, கேட்கப்பட்டு, மதிக்கப்படுகின்றன என்பதற்கான அடையாளம்,” என்று கருத்து தெரிவித்தார்.

2001 ஏப்ரல் 18 அன்று கந்தமால் மாவட்டத்தின் பாமுனிகாம் பகுதியில் பிறந்த அமித் குமார் தேவ், யுதிஷ்திர் நாயக் மற்றும் லீனா சந்த் தம்பதியரின் மூன்று குழந்தைகளில் மூத்தவர். அவரது தாயகம் கட்டக்–புவனேஸ்வர் பேராயத்தின் கீழ் உள்ள டுகுமாஹா பங்கின் பஞ்சமாஹா ஆகும். குடும்பம் 2016ஆம் ஆண்டு ராயகடாவிற்கு குடிபெயர்ந்தது. 2019ஆம் ஆண்டு ராயகடாவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், தற்போது ராயகடாவில் உள்ள காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் & ரிசர்ச் (GIACR) நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) B.Tech படித்து வருகிறார்.

 தன்னார்வலராக செயல்பட்டு வரும் அமித் தேவ், 2023–2025 காலகட்டத்தில் மறைமாவட்ட இளைஞர் தலைவராகச் சேவை செய்துள்ளார். முழுநேர  தன்னார்வலராக ஆன்மீக உருவாக்கம், இளைஞர் துணைநடத்தல் மற்றும் பணிமுனைச் சேவைகளில் தன்னை அர்ப்பணித்துள்ளார். மேலும், ஊடகம் மற்றும் டிஜிட்டல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, படைப்பாற்றல் கொண்ட தொடர்பாடல் கருவிகள் மூலம் இளைஞர்களை ஈர்த்து ஒருங்கிணைத்துள்ளார்.

ICYM ராயகடா மறைமாவட்டத்தின் முன்னாள் தலைவர் சுந்தி கஜேந்திரா, தேசியத் தலைமைப் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்ற தேவையான திறமையும் ஆற்றலும் அமித் தேவுக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.மேற்கு வங்காள–சிக்கிம் பிராந்தியத்தைச் சேர்ந்த ராஜ் பாக் அவர்களைத் தொடர்ந்து, அமித் தேவ் ICYM தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமித் தேவின் தாய் லீனா சந்த்,“ICYM தேசியத் தலைவராக என் மகனை கடவுள் தேர்ந்தெடுத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். தினமும் காலை ஜெபங்களிலும், ஒவ்வொரு மாலையும் தவறாமல் ஜெபமாலை ஜெபிக்க வழிநடத்தியதின் கனியே இது,” என்று கூறினார்.

1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) அங்கீகாரம் பெற்ற இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கம், இந்தியாவில் லத்தீன் மரபைச் சேர்ந்த கத்தோலிக்க இளைஞர்களுக்கான முன்னணி தேசிய அமைப்பாகும். “Lead, Serve, Shine” (முன்னிலை வகி, சேவை செய், ஒளிர்) என்ற கோஷத்துடன், 14 மாநிலங்களிலிருந்து  மற்றும் 132 மறைமாவட்டங்கள் வழியாக செயல்பட்டு, 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை எட்டிச் சென்று, உருவாக்கம், நட்பு மற்றும் செயல் ஆகியவற்றின் மூலம் முழுமையான இளைஞர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Tamil Survey Popup Image