என்னைவிட முன்னிடம் பெற்றவர் ! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

கிறிஸ்து பிறப்பு காலம்  (03.01.2024) 
I: 1யோவா:  2: 29-3: 6
II:திபா 98: 1. 3b-4. 5-6
III: யோவா: 1: 29-34

பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்" (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். "இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்" எனச் சான்று பகர்ந்தார்.

நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் (ளரஉஉநளளழசள) - இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா?

இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் "இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்" என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம்.

இறைவேண்டல்
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பிறரை எங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணும் நல்ல, நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்