இன்றைய விழா நம்மை, புரட்சியைக் கொணர்ந்த புரட்சித்தாயின் பிள்ளைகளாக வாழவும் அழைக்கிறது. இப்புரட்சிமிகு சமூகத்தை முதலில் நம் குடும்பதில் படைக்க விழைவோம்.
தர்மம் செய்யும் போது பெறுபவர்கள் விழிகளில் நன்றி தெரியவேண்டும் என்று கூட எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களே சிறந்த மனிதர். ”தர்மம் தலைகாக்கும். இருப்பதைச் சிறப்புடன் பகிர்ந்து வாழ்ந்தால் போதும், அது நிலைவாழ்வுக்கு வழி காட்டும்.
இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன.
நம்புங்கள்... நம்புங்கள்...
நோயியுற்றோரையும் சிறு பிள்ளைகளையும் இயேசுவிடம் கொண்டு செல்வதில் என்றும் பொறுப்புடன் செயல்பட ஒவ்வொரு பெற்றோரையும் ஆண்டவர் அழைக்கிறார். கிறிஸ்தவப் பெற்றோர் இந்த அழைப்பில் அக்கறைகொள்ள வேண்டும்.
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்ற மறைநூல் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து திருமணத்தைச் சிறப்பு செய்யும் வகையில் நமது பிள்ளை வளர்ப்பில் நமது கவனம் இருக்க வேண்டும்.