மீட்பு என்பது மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. மனமாற்றம் இல்லையேல் மீட்பு வெறும் பகல் கனவுதான். மனமாற்றத்திற்கு முயற்சி வேண்டும். சக்கேயுவின் முயற்சி அவருக்கு மீட்பதை தேடி தந்தது.
புனித பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரின் கல்லறைகள் மேல் எழுப்பப்பட்ட இந்த இரண்டு பேராலயங்களும் நமது நம்பிக்கை வாழ்வுக்கும் சாட்சிய வாழ்வுக்கும் அடித்தளமாக நிற்பதைப் போல, அவர்களின் வாழ்க்கையும் பணி வாழ்வும் நமது பணி வாழ்வுக்கு உந்துதலாக இருக்கின்றன.
“நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி இறைஞ்சி மன்றாடுவோரின் இறைவேண்டலுக்குக் கடவுள் செவிசாய்க்க மாட்டார?
பவுல் ஒனேசிமை பிலேமோனிடம் திருப்பி அனுப்புகிறார், மேலும் ஒனேசிமை அவரது முந்தைய குற்றத்திற்காக தண்டிக்க வேண்டாம் என்றும், ஒனேசிமை "பயனுள்ள" சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு பிலேமோனிடம் கேட்கிறார்.
ஒரு பணியாளர் வயல்வெளியில் வேலை செய்து நெடுநேரம் உழைத்தப் பிறகு, எஜமானின் வீட்டிற்குள் வந்து எஜமானிடம் உணவளிக்கக் கோருவதில்லை என்பதை இயேசு அவர்களிடம் சுட்டிக்காட்டுகிறார். மாறாக, எஜமானருக்கு உணவு தயாரித்து வழங்குவதன் மூலம் பணியாள் பணிபுரியும் ஒரு நபராகவே இருப்பார் எற்கிறார்.
‘’உன் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கடிந்துகொள்;
அவர் மனந்திரும்பினால், அவரை மன்னியுங்கள்.
மேலும் அவர் ஒரே நாளில் ஏழு முறை உங்களுக்கு தவறு செய்தால்
ஏழு முறை உங்களிடம் திரும்பி வந்து, 'மன்னிக்கவும்,'
நீ அவனை மன்னிக்க வேண்டும்" என்கிறார்.
அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் என்றும் அவர்களை வாழ்த்துகிறார்.
பிலிப்பியரின் நல்ல கிறிஸ்தவ வாழ்வின் நிமித்தம் பவுல் மகிச்சியடைவதாகவும், கிறிஸ்துவின் அடுத்த வருகையின் போது, அவரது உழைப்பு வீணாகவில்லை, அவர் வெறுமனே உழைக்கவில்லை எனும் உண்மை வெளிப்படும் என்றும் விவரிக்கிறார்.
விருத்துக்கு ஏற்பாடு செய்தவர் கோபம் அடைகிறார். நிறைவாக, அவர் தெருவோரங்களில் இருக்கின்ற சாதாரண மனிதர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தார்" என்று பதிலாகத் தந்தார்
விருந்துக்கு அழைக்கும்போது யாரால் பதிலுக்கு விருந்தளிக்க இயலாதோ அத்தகையோரை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எடுத்துகாட்டாக, ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியோரை கூறுகிறார்.
அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார் என்று அறிகிறோம்.
‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று தன் நிலையை வெளிப்படுத்துகிறார் ஆண்டவர்.
ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் போன்று கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்தவர்கள் இறையரசில் இருப்பதைப் பார்க்கும்போது அவர்களுக்கு மிகுந்த வருத்தம் ஏற்படும் என்றும், எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் இறையரசுக்குள் இருப்பார்கள்
திருத்தூதர் என்பது ‘apostle’ என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இலத்தின் மொழியில் ‘MIssio’ என்றுள்ளது. இதன் பொருள் ‘அனுப்பப்படுதல்’ என்பதாகும். ஆகவே, திருத்தூதர்கள் என்றாலே ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்று பொருளாகும்.