நன்னடத்தை சீடத்துவத்தின் சிகரம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

6 பிப்ரவரி 2026,  
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – வெள்ளி

சீராக் 47: 2-11
மாற்கு 6: 14-29

 
நன்னடத்தை சீடத்துவத்தின் சிகரம்!
 
முதல் வாசகம்.

இவ்வாசகத்தில்  இஸ்ரயேல் மக்களிடமிருந்து கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீது அரசர் புகழப்படுகிறார்.  இது அவரது தொடக்கக்கால வாழ்க்கை மற்றும் தலைமைத்துவத்தின் அம்சங்களை விவரிக்கிறது:

தாவீதின் தைரியமும் ஆண்டவர் மீதான நம்பிக்கையும், குறிப்பாக ஒரு கவண் பயன்படுத்தி கோலியாத்தை வீழத்தியதும் சிறப்பிக்கப்படுகின்றன – கோலியாத்தை வீழ்த்தயது  இஸ்ரயேலை பெரும் அவமானத்திலிருந்து விடுவித்த ஒரு செயலாகக் கருதப்படுகிறது. 

தாவீதின் ஆற்றலானது அவர் கடவுளுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவை வெளிப்புத்துகிறது.   தாவீது தனது வாழ்நாள் முழுவதும், கடவுளை தனது வெற்றிகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமாக ஏற்று, முழு மனதுடன் கடவுளுக்கு நன்றி செலுத்தி வழிபட்டார் என்று அறிகிறோம்.

தனது பிற்காலத்தில், அவர் வழிபாட்டை ஒழுங்கமைத்தார், பலிபீடத்திற்கு முன்பாக பாடகர்களை நியமித்தார், மேலும் கடவுளை தொடர்ந்து மாட்சிபடுத்த புனிதமான கொண்டாட்டங்களை ஏற்படுத்தினார்.

தாவீதின் பாவங்களை கடவுள் மன்னித்தார், அவரது அரச வழிமரபை நிலைநிறுத்தினார் என்று சீராக்கின் ஆசிரியர் விவரிக்கிறார்.


நற்செய்தி.


இந்த நற்செய்தி பகுதியில்,   மக்கள் இயேசுவின் பின்னணியைப் பற்றி ஊகிக்கத் தொடங்கினர் - சிலர் அவர் எலியா என்றும், மற்றவர்கள் பழைய இறைவாக்கனர்கள் போல்  ஒருவராக இருக்கலாம் என்றும் கருத்துரைத்தார்கள்.  இருப்பினும், ஏரோது, இயேசுதான்  உயிர்த்தெழுந்த திருமுழுக்கு யோவானாக  இருக்கலாம் என்று நினைத்தான். 

ஏரோது தன் சகோதரனின் மனைவியான ஏரோதியாளுடனான கள்ள உறவுக்கு எதிராகப் பேசியதற்காக திருமுழுக்கு யோவானை கைது செய்து  சிறையில் அடைத்தான்.  

 
ஏரோதுடனான ஏரோதியாளின் வாழ்வு சட்டவிரோதமானது என்று பகிரங்கமாகக் கண்டனம் செய்ததால் ஏரோதியாள் யோவானின் மீது ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டிருந்தான். ஏரோதியாள் என்பவள் இயேசுவைக் குழந்தைப் பருவத்தில் கொல்லத் துடித்தப்  பெரிய ஏரோதுவின் பேத்தி ஆவாள. இவளது கணவன் பிலப்பு. இவள் பிலிப்புவைவிட்டு, அவனுடைய சகோதரன் ஏரோது அந்திப்பாசுடன்  (Herod Antipas) கூடி வாழ்ந்தாள். இந்த கள்ள திருமண உறவை திருமுநழுக்கு யோவன் வன்மையாகக கண்டித்தார்.

எனவே,  அவள் திருமுழுக்கு யோவானை பழிவாங்க (கொல்ல) தக்கச் சமயம் பார்த்து காத்திருந்தாள்.  

விருந்து மற்றும் நடனம்

தனது பிறந்தநாளில், ஏரோது தனது முக்கியத் தலைவர்களுக்கு விருந்து வைத்தான். கொண்டாட்டத்தின் போது, ஏரோது மற்றும் அவரது விருந்தினர்களை மகிழ்விக்கும் ஒரு நடனத்தை ஏரோது நிகழ்த்தினார். ஏரோதியாளின் மகள் நடனமாடினாள். ஏரோது தனது உற்சாகத்தில், அவள் கேட்பதை, தன் அரசில் பாதி வரை கூட கொடுப்பதாக அவசரமாக உறுதியளித்தார்.

அழிவு கோரிக்கை

அவளுடைய தாயாரால் தூண்டப்பட்டு, அந்தப் பெண் ஏரோதிடம் திருமுழுக்கு  யோவானின்  தலையை ஒரு தட்டில்" கேட்டாள்.  ஏரோது வருத்தப்பட்டாலும், தனது விருந்தினர்களுக்கு முன்பாக தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, யோவானை சிறையில் தலை துண்டிக்க உத்தரவிட்டதால் , திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்ப்ட்டு மரித்தார். 


சிந்தனைக்கு.


ஏரோதுவுடனான தனது திருமணம் சட்டவிரோதமானது என்று யோவான் பகிரங்கமாகக் கண்டித்ததால் ஏரோதியாள் அவர் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தாள்.  தீராக் கோபம் கொலைக்கு வழிவகுத்தது. 

திருமுழுக்கு யோவான்  உண்மையை நிலைநாட்ட  சக்திவாய்ந்த தலைவர்களிடம் கூட தயங்காமல்  குரல் கொடுத்தார். அவரது  துணிச்சல் நமக்கு இன்றும் ஒரு சவாலாக அமைக்கிறது. 
 
பல பிரமுகர்கள் மத்தியில் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது பெரிதென நினைத்தான் ஏரோது. எனவே, உண்மைக்குஅவன் தலைவணங்கவில்லை.
அவன் அநீதிக்குத் துணை போனான். அவன் தன் தவற்றை ஏற்கவில்லை. அவனது கோழைத்தனம் கொலைக்கு இட்டுச் சென்றது. 

 
ஒருவர் கடுமையாகப் பாவம் செய்து மனந்திரும்ப மறுத்தால், அந்தப் பாவம்  விளைவிக்கும் விளைவுகள் காலப்போக்கில் மோசமடைந்து  ஆன்மீக குருட்டுத்தன்மையையும் அமைதியின்மையையும் உருவாக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்துவோம்.  நாம் கடுமையான பாவத்தில் விழும்போது, நாம் இரு தேர்வுகளை எதிர்கொள்கிறோம். ஒன்று மனந்திரும்புதல் மற்றொன்று பிடிவாதம். மனந்திரும்புதல் மட்டுமே கடவுளின் இரக்கம், குணப்படுத்துதல் மற்றும் மனமாற்றத்திற்கான கதவைத் திறக்கும். 

முதல் வாசகத்தில் மனம் திரும்பிய தாவீது அரசர் மக்களாலும் கடவுளாளும் போற்றப்பட்டதை அறிந்தோம். நற்செய்தியிலோ, மனம் திரும்பாத ஏரோதிவின் கொடிய செயலை  கேட்டோம். நாம் யார் பக்கம்?

இறைவேண்டல்.


மிகவும் இரக்கமுள்ள ஆண்டவரே, உமது எல்லையற்ற இரக்கம் தேவைப்படும் ஒரு பாவியாக நான் உமக்கு முன்பாக வருகிறேன். என் இருதயத்தை முழுமையாக உம்மிடம் திறப்பதைத் தடுக்கும் ஆன்மீக குருட்டுத்தன்மை மற்றும் பிடிவாதத்திலிருந்து என்னை விடுவிப்பீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452