இயேசுவும், மறைபொருளாக இருக்கும் விண்ணரசை சில உவமைகள் வாயிலாக எடுத்துரைத்தப்பின், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேடகிறார். சீடர்களும் “ஆம்” என்கின்றார்கள்.
கிறிஸ்து கடவுளின் அன்பைப் பகிரவே மனிதனானார். தம்மை முழுவதுமாகக் கையளித்த இறைமகனின் பிறப்புக்காகத் தயாரிக்கும் நாம் பிறருடைய தேவையை உணர்ந்து தாராள மனதுடன் இருப்பதைப் பகிர்பவர்களாக வாழவேண்டும்.
கடவுளின் வார்த்தை நமக்கு வாழ்வு தருகின்றது. கடவுள் தரும் வார்த்தையின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. யாராலும் முறியடிக்க முடியாது. இந்த உலகமே அழிந்து போனாலும் அவரின் வார்த்தை ஒரு போதும் அழியாது.
நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்ற வார்த்தையை உண்மையாக்கும் விதமாக கிறிஸ்து பிறப்புக்காக நம்மைத் தயார் செய்யும் வேளையில் அவரே ஆண்டவர் என்பதை உள்ளூர நம்பி அறிக்கையிடுவோம்.
தன் வறுமையைப் பொருட்படுத்தாமல் திருச்சட்டத்தை மதித்து தனக்கிருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக்கிய ஏழைக்கைம்பெண் அதிகமாகக் காணிக்கை செலுத்திய அனைவரையும் விட சிறந்தவராய் இயேசுவால் பாராட்டப்பட்டார்.
இயேசுவின் அன்பு என்னும் சாட்டையால் இவற்றை அடித்துத் துரத்தும் போது நம் உடல் மனம் ஆன்மா முழுவதும் தூய்மையாகி கடவுள் வந்து தங்கும் இல்லமாக நாம் மாற முடியும்.