“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்று நேரடியாகத் திட்டுகிறார்.
கடவுளின் ஆசீரையும் அருளையும் பெறுவதற்கு பொறாமை என்ற நச்சுக்கிருமித் தடையாக இருக்கிறது. அவற்றைக் களைந்து மனிதநேயத்திலும் மனித மாண்பிலும் சிறந்து விளங்குவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
சமத்துவமும் சமூக நீதியும் வெளிப்பட நாம் போராட வேண்டும். இதைச் செய்திடவே நம் ஆண்டவர் இயேசு நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். சட்டத்தை வைத்து பிறர் நல வாழ்வு பெற நாம் உழைக்கத் தயாரா?
நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம்.
வழக்கமான திருவிவிலிய வாசிப்பு என்பது நீங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடிய மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்றாகும். இந்த தினசரி திருவிவிலிய வாசிப்புத் திட்டம், 180 நாட்களில் நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது, கடவுளுடைய வார்த்தையின் நிலையான உணவின் அனைத்து நன்மைகளையும் உங்களுக்கு வழங்கும்.
கடவுளுடைய திட்டத்தை கபிரியேலின் வார்த்தைகள் வழியாகக் கேட்டவுடன் மரியா கலங்கினார் என நாம் வாசிக்கிறோம். கடவுளின் விருப்பம் நம்மைக் கலங்கடிக்கக்கூடியதா? பயமுறுத்தக் கூடியதா?
நாம் தடுமாறும் வேளையில் கடவுள் அவருடைய வார்த்தைகளாலோ அல்லது மனிதர்கள் மூலமோ நிகழ்வுகள் மூலமோ நாம் என்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறையை நமக்கு நிச்சயம் தருவார். இறைதிட்டம் நம்மிலே நிறைவேற அனுமதிக்கத் தயாரா?
இறைவேண்டலாலும், இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.