ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?
இறைவேண்டலாலும், இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.
நமது உள்ளத்தின் ஆழத்தை அச்செபங்கள் தொடுவதில்லை. இதன் விளைவாக நாம் வாழ்வில் தளர்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இந்நாட்களைப் பயன்படுத்தி நம்முடைய இறை உறவை ஆழப்படுத்த முயலுவோம்.அவ்வுறவை நம் வாழ்நாளெல்லாம் தொடர முயற்சிப்போம்.
கிறிஸ்து கடவுளின் அன்பைப் பகிரவே மனிதனானார். தம்மை முழுவதுமாகக் கையளித்த இறைமகனின் பிறப்புக்காகத் தயாரிக்கும் நாம் பிறருடைய தேவையை உணர்ந்து தாராள மனதுடன் இருப்பதைப் பகிர்பவர்களாக வாழவேண்டும்.
கடவுளின் வார்த்தை நமக்கு வாழ்வு தருகின்றது. கடவுள் தரும் வார்த்தையின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. யாராலும் முறியடிக்க முடியாது. இந்த உலகமே அழிந்து போனாலும் அவரின் வார்த்தை ஒரு போதும் அழியாது.
நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்ற வார்த்தையை உண்மையாக்கும் விதமாக கிறிஸ்து பிறப்புக்காக நம்மைத் தயார் செய்யும் வேளையில் அவரே ஆண்டவர் என்பதை உள்ளூர நம்பி அறிக்கையிடுவோம்.
தன் வறுமையைப் பொருட்படுத்தாமல் திருச்சட்டத்தை மதித்து தனக்கிருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக்கிய ஏழைக்கைம்பெண் அதிகமாகக் காணிக்கை செலுத்திய அனைவரையும் விட சிறந்தவராய் இயேசுவால் பாராட்டப்பட்டார்.