அன்னை மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' '' (லூக்கா 1:47-48)
நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின் வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான்.
ஒருவரின் துன்பத்தையும் வேதனையையும் பார்த்து மனதுருகி அவருக்கு உதவ முன்வருவது பரிவு. பிறருடைய துன்பத்தில் அவரோடு இணைந்து துன்பத்தைப் பகிர்வது பரிவு. பிறருக்காக கண்ணீர் வடிப்பது பரிவு.
அன்புக்குரியவர்களே இத்தகைய ஆழமான இறைஉறவில் வளரவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு உதட்டளவில் ஆண்டவரே என அழைப்பதால் நம்மால் இறைஉறவில் வளர இயலாது எனக் கூறுகிறார்.
ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.