வரி வசூலிப்பவர்களை பாவிகளாக முத்திரைக்குத்தி, ஒதுக்கி வைத்தனர். இயேசு, மத்தேயுவை தம்முடைய சீடர்களில் ஒருவராக அழைத்ததன் மூலம் அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு" அளித்தார்.
இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார்.
விண்ணக இறையரசில் நுழைவதற்கு பல சோதனைகள் அவசியம் என்பதையும், கடவுளின் அருளால் நாம் எவ்வாறு நம்பிக்கையில் நிலைத்திருக்க முடியும் என்பதையும் விவரிக்கிறார்.
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்றும், எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் என்றும், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்
தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
பின்னர், வாசித்தப் பகுதிக்கு திருத்தொண்டர் பிலிப்புவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பிக்கையாளராக மாறுகிறார். அவர் உடனடியாக திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்து இயேசுவின் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார்.
நற்செய்தியில், இயேசு தனது தந்தையின் தருவுளத்தை நிறைவேற்றுவதுப் பற்றிப் பேசுகிறார். அவரே நம் தாகத்தைத் தணித்து, நம் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் உணவாக மாறுகிறார். இயேசு தனது அப்பாவுடனான உறவில் நம்பிக்கை கொண்டவர்கள் உயிர்த்தெழுவர் என உறுதியளிக்கிறார். ‘தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர்’ என்றும் . அவரிடம் வருபவரை அவர் புறம்பே தள்ளிவிடமாட்டார் என்றும் உறுதியளிக்கிறார்
இயேசு அளிக்கும் அவரது உடலான வாழ்வளிக்கும் உணவினை அவர்மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உண்ணும் வாய்ப்பை வழங்குகிறார் ஆண்டவர். ஏனெனில் அவர் உலக மீட்பர்.
இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். பின்னர், இயேசு அவரிடம் கொடுக்கப்பட்ட ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை மக்களுக்குக் கொடுத்தார்.
இருள் மற்றும் ஒளி ஆகிய இரண்டிற்குமான வேறுபாட்டை அறிகிறோம். ஒளியின் மக்கள் கடவுளின் மக்கள். திருத்தூதர்களின் அணுகுமுறை இன்றைய நற்செய்தியில் ஒளியின் வல்லமையைப் பிரதிபலிக்கிறது