ஒன்றிப்பும் ஒருமைப்பாடுமின்றி கடவுளின் மீட்புத்தட்டம் விரைவில் நறைவேறாது. நமது ஒன்றிப்பில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது. எனவெதான், ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!’ (யோவான் 17:21)
பல ஆண்டுகளாக நல்ல, கிறிஸ்தவ/கத்தோலிக்க கல்வியின் மூலம் வளரவும் கற்றுக்கொள்ளவும் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆம். விழிப்பாக இருத்தலுக்கு நமது அழைப்பைப் பற்றிய புரிதல் அவசியம். ஆண்டவர் விழிப்பாக இருக்கும் பணியாளரை போற்றுகிறார்.
மனமாறிய எபேசியர் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயர் நிலையில் வைத்துஃ போற்றுகிறார்.
உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருஅவைக்குத் தலையாக தந்துள்ளார் என்றும், நிறைவாக, பவுல் திருஅவையே (நாமே) அவரது உடல் என்ற மறைபொருளை எடுத்தியம்புகிறார்
ஆண்டவர் இயேசுவை விடுதலையின், மீட்பின் போதகராகவும் இறைவாக்கினராகவும் விவரிக்கும் புனித லூக்கா, மீட்பரை பற்றிய எசாயாவின் முன்னறிவிப்போடு இயேசுவின் வருகையை இணைத்து (4:18-19
பவுல் அடிகள் கூறிதைப்போல், தூய ஆவியின் கனியான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பனவற்றைக் கொண்டு கிறிஸ்துவில் வாழ்வோம்.
ரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் என்பது இயேசு அறிந்த ஒன்று. வெளிப்புறச் செயல்கள் அல்ல உள்ளத்தின் தூய்மைக்கான செயல்களே மேன்மையாவை என்பதை இயேசு எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கலாம்.
இயேசு யோனாவை முன்னிலைப் படுத்தி போதிக்கிறார். கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவராக, நினிவே பகுதியில் புறவினத்தார் மத்தியில் இறைவாக்குரைக்க அனுப்பப்பட்டவர் யோனா.
இயேசுவை ஈன்றெடுத்த தாய் இன்று ஒரு பெண்ணால் போற்றப்படுகிறார். அதைக் கேட்ட இயேசுவோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்று மறுமொழியாகக் கூறுகிறார்.
ஆண்டவர் இயேசுவோ, “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?” என்று அவர்களிடம் மறுகேள்வி கேட்டு, தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராகச் சவால்விடுகிறார்.
‘அறிவிலிகள்’ என்று திட்டுகிறார். கலாத்தியாவில் புறவினத்தார் பவுல் அடிகள் வழியாக இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு, நம்பினார்கள், தூய ஆவியானவரும் அவர்களில் பொழியப்பட்டார்.
அத்துடன் நின்றுவிடாமல், மறுநாள் சாவடி பணியாளரிடம் சிறிது பணம் கொடுத்து, அவரை நன்றாகக் கவனித்துகொள்ள வேண்டுகிறார் என்று கதையைக் கூறிய பின், அந்த மூவரில் யார் உண்மையான அண்டை வீட்டார் அல்லது அடுத்திருப்பவர் யார் என்று இயேசு கேட்டபோது, அவர்தான் பரிவிரக்கம் காட்டியவர்தான் என்று அறிஞர் பதிலளிக்கிறார். இயேசு அவரைப் போய் அவ்வாறே செய்யும்படி கூறுகிறா
தம்முடைய சீடர்களிடம் தனிமையில் பேசி, “நீங்கள் பார்ப்பதைக் காணும் உங்கள் கண்கள் பேறுபெற்றவை. பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் செய்வதைப் பார்க்கவும் கேட்கவும் விரும்பினர், ஆனால் அவர்களால் முடியவில்லை என்று நிறைவுச் செய்கிறார்.
கடவுள் நம்மில் என்ன விரும்புகிறார்? இயேசு சொல்வதைக் கேட்டு, அவர் நம்மில் எதை எதிர்பார்கிறார் என்பதை அறிந்துணர நம் செவிகளைத் திறக்க வேண்டும் என்பதாகும்.
என் மீட்பர் வாழ்கின்றார்’ என்றும் இறுதியில் மண்மேல் எழுவார், தன்னை மீட்பார் என்றும் உறுதியோடு, தன் மீட்பர் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையை யோபு இழந்துவிடவில்லை. அவரது இறை அனுபவம் அவருக்கு மன வலிமையைத் தந்தது. இழித்துரைக்கும் நண்பர்களையும் மனைவயையும் அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.