உறவுப்பாலம்

  • அப்பா உம் பிள்ளையாக

    Jun 20, 2020
    அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்

    தப்பாமல் பணி செய்ய வந்திருக்கிறேன்

    எப்போதும் என்னோடு நீர் இருக்கவே

    இப்போது வரம் வேண்டி வந்திருக்கிறேன்

    அப்பா உம் பிள்ளையாக வந்திருக்கிறேன்
  • என் மக்கள்

    Jun 19, 2020
    இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி வேறு எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

    யோவேல் 2-27.
  • நிறைவான அமைதி

    Jun 18, 2020
    பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்.

    எபிரேயர் 13-5.
  • இறை உறவில் பின்செல்

    Jun 17, 2020
    எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்.

    1 அரசர்கள் 18-21
  • இறை உறவில் -முன் செல்ல

    Jun 15, 2020
    இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

    உரோமையர் 12-2
  • இறை உறவில் - நம்புகிறீர்களா

    Jun 14, 2020
    அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். .

    மத்தேய 9-28.
  • அன்பே வாழ்வு

    Jun 13, 2020
    நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.

    திருப்பாடல்கள் 32-8.
  • ஆற்றல் மிக்கது

    Jun 10, 2020
    என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! - திருப்பாடல்கள் 119:105. ஆண்டவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பின் மிகுதியால் நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. அவருடைய சொற்கள் நம் நாவுக்கு எத்துணை இனிமையானவை! நம் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
  • காக்கின்ற கடவுள்

    Jun 10, 2020
    நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.

    எசாயா 43-2.
  • உரத்த குரலில்

    Jun 08, 2020
    என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?

    திருப்பாடல்கள 42-2.
  • மீட்பின் கரம்

    Jun 07, 2020
    எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

    கலாத்தியர் 2-20
  • அப்பா பிதாவே

    Jun 06, 2020
    "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.

    மாற்கு 14-36.
  • உறுதியாக இருக்க

    Jun 04, 2020
    அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

    லூக்கா 6-48.
  • உம் பிள்ளை நான்

    Jun 03, 2020
    வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது - திருப்பாடல்கள் 19-1. ஆண்டவர் நம்மோடு பேசுகிறவர். அவர் இயற்கையின் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். வானத்தைப் பார்க்கும்போது அது கடவுளுடைய மகிமையை சொல்லுகிறது. வானத்திலுள்ள மேகங்களையெல்லாம் அவருடைய கை வன்மையை காட்டுகிறது.
  • பிள்ளையாக வாழ

    Jun 03, 2020
    அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் - 1 கொரிந்தியர் 13-7. அன்பு சகலத்தையும் பொறுத்து கொள்ளும் என்றால், வேறு வழியின்றி பொறுத்து கொள்ளும் என்று அர்த்தம் இல்லை. துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவற்றை தாங்கி கொள்ளும் என்பதுதான் இதற்கு அர்த்தமாகும்.