அவருக்கான தேடல்
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
லூக்கா 17-17,18
ஆண்டவரை நாம் இன்றே ,இப்பொழுதே தேட வேண்டும். நாளை நமக்கு கேள்விக்குறி. சமயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஆண்டவரை தேடுவோம்.
இறந்த பின் அவரை நினைக்க முடியாது. பாதாளத்தில் அவரை ஆராதிக்க முடியாது. நாம் உட்காரும் போதும் நிற்கும் போதும் நடக்கும்போதும் ஒரு வேலையை செய்யும் போதும் ஆண்டவரை நினைப்போம். இந்நாள் வரை செய்தவற்றுக்காகவும், இனிமேலும் செய்யபோவதற்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்.
அதி காலையில் படுக்கையில் இருந்து எழுந்தது முதல் இரவு மீண்டும் உறங்க செல்லும் வரை நமக்கு அருளிய நன்மைகள் நினைத்து நன்றி சொல்லுவோம் . சில வேளைகளில் நமக்கு தீமை என நாம் நினைப்பதை கடவுள் நமக்கு நன்மையாக மாற்றி இருப்பார். அதற்காக நன்றி சொல்வோம். சில நிகழ்வுகள் மூலம் நல்ல பாடங்களை நமக்கு கற்று தந்திருப்பார். சில நிகழ்வுகள் மூலம் மனிதரை கண்டறிய செய்திருப்பார் . சில நிகழ்வுகள் மூலம் நம்மை ஆசீர்வதித்து இருப்பார். சில வார்த்தைகள். மூலம் நம்மைபாது காத்து இருப்பார். துதிப்போம். புகழ்வோம். நன்றி சொல்வோம்.
அவர் தேடுவது நன்றியுள்ள ஒரு ஆன்மாவை. நன்றி சொல்ல சொல்ல இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தை பெறுவோம்.
ஆண்டவரே , நன்மைகள் பல செய்பவரே உமக்கு நன்றி. என் உயிரை அழிவினின்று காப்பவரே உமக்கு நன்றி. அரணாக கோட்டையாக இருந்து என்னை காப்பவரே உமக்கு நன்றி. உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்றவரே உமக்கு நன்றி. உம் மாறாத அன்புக்கு, பாதுகாப்புக்கு, நன்றி ஆண்டவரே, நீர் எனக்கு நண்மையையன்றி தீமையை விட மாட்டீர் என்று நம்புகிறேன் . ஆமென்.