முஸ்லிம்களின் ரமலான் மற்றும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் இரண்டும் ஒரே நாளில் தொடக்கம் ! | Veritas tamil
முஸ்லிம்களின் ரமலான் மற்றும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் இரண்டும் ஒரே நாளில் தொடக்கம் !
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ரமலான் புனித மாதமும் கிறிஸ்தவர்களின் தவக் காலமும் பிப்ரவரி 18 அன்று ஒரே நாளில் துவங்கியது. இது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிகழ்ந்த அறிய தருணமாக இது அமைகிறது.
பிப்ரவரி 6 அன்று வெளியிடப்பட்ட செய்தியில், தென் பிலிப்பைன்ஸின் மிண்டனாவோவில் உள்ள கிடாபவான் ஆயரகத்தின் ஆயர் ஜோசே கோலின் எம். பகஃபோரோ, இது சாதாரண நிகழ்வு அல்ல இரு சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து பயணிக்க ஒரு அழைப்பு என அவர் வலியுறுத்தினார்.
மேலும் “ இந்த இருவேறு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் துவங்கும் நிகழ்வு ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதம் ,” என்று கூறிய அவர் “வன்முறை, பிளவு, சுற்றுச்சூழல் நெருக்கடி நிறைந்த இக்காலத்தில், மீண்டும் நம்பிக்கையில் நிலைபெற அழைக்கும் ஒரு வாய்ப்பு எனவும் வலியுறுத்தினார் .
சமாதானம் என்பது போர் இல்லாமால் அமைதியான வழியில் செல்வது மட்டுமல்ல; அது இறைவனுடனும்,அருகில் இருப்பவருடனும் மற்றும் படைப்புகள் மீதும் அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்ற செய்தியை அது விளக்குகிறது .
திருத்தந்தை பிரான்சிஸின் Laudato Si’ மற்றும் Fratelli Tutti ஆவணங்களை மேற்கோள் காட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமூக மாற்றமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை பிரிக்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் மதங்களுக்கு இடையேயான உரையாடல் ஆணையத்தின் தலைவராக உள்ள ஆயர் பகஃபோரோ அவர்கள் கூறுகையில் “இவை புனித நிகழ்வு எனவும் இவை சமாதானத்திற்கான ஒரு அழைப்பு ,” என்றும் சுட்டிக்காட்டினார் .
இறுதியாக , ரமலான், தவக் காலமும் ஒன்றோடொன்று இணைந்து நடைபெறும் இக்காலத்தில், தவமும், தானமும் வெறும் சொற்களில் மட்டும் இல்லாமல் , அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படும் தருணமாக மாற வேண்டும் என்று கூறினார்.