எளிமையுள்ளவர்களாக
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
மத்தேயு 5-3.
எளிமையுள்ளவர்கள் தங்களுக்கு உள்ளவற்றில் திருப்தியாக இருக்கிறார்கள். எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்க வேண்டும்.
ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏழைகளை ஒதுக்க கூடாது. அவர்கள் மீது இரக்கம் காண்பிக்க வேண்டும். அவர்களுடைய குறைச்சல்களில் நாம் உதவி புரிய வேண்டும். . நம்காலத்தில் வாழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்வு அதற்கு எடுத்துகாண்டாய் அமைந்தது.
திருத்தூதர் பவுல் ஆண்டவரில் மிகுந்த செல்வந்தனாய் இருந்தார். ஆவியானவருடைய அனைத்து வரங்களையும் பெற்று, ஆண்டவரின் அருளோடு வல்லமையாக செயல்பட்டார். ஆயினும் அவர் எளிமையுள்ளவராகவே இருந்தார். தன்னைப்பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது, தான் எல்லா திருதூதற்களிலும் சிறியவன் கடைசியானவன் என்று கருதுகிறார் . தன்னையே தாழ்த்தினார்.
நாம் ஆவியில் எளிமையுள்ளவர்கள் இருப்பதாக நினைக்கவேண்டும். இறை சமூகத்தில் நின்று நமது உள்ளத்தில் எந்தவித பெருமையுமில்லாமல், அவருடைய இரக்கத்திற்காகவும் அருளுக்காகவும் மன்றாட வேண்டும்.
ஆண்டவரே உம்மை போற்றுகிறேன். எளிமையான நல்ல உள்ளத்தை எனக்குள் உருவாக்கும். உறுதி தாரும் ஆவியை என் மேல் பொழிந்தருழும். எந்த சூழ்நிலையிலும் உம்மை விட்டு பிரியாத உறுதியை எனக்கு தாரும். ஆமென்.