உறவுப்பாலம்

  • அறனும் அடைக்கலமும் அவரே

    May 10, 2020
    "நானோ உமது ஆற்றலை புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அறனும் அடைக்கலமுமாய் இருந்தீர்" - திருப்பாடல்கள் 59:16. இன்றைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் தான் நாம் நேற்றைய இரவில் தூக்கத் தொடங்கினோம்.
  • நம் துன்பங்களின் வெளிப்பாடு

    May 08, 2020
    இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன் - உரோமையர் 8:18. கழுகு தன 40 வது வயதில் மலை உச்சிக்குச் சென்று, தன் அலகுகளைக் கூர்மையாக்கி, தன் சிறகுகளைத் தானே பிடுங்கி, புது சிறகுகள் வளர வழி செய்யும்.
  • பிறரிலே இறைவனைக்கான

    May 07, 2020
    "எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்" - நீதிமொழிகள் 8:17. இயேசு எல்லாவற்றிற்கும் மேலாக அவரையும்,நம்மை நாமே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய அழைக்கின்றார். இறைவன் வாழும் ஆலயமான மனிதரை அன்பு செய்யாமல், பேராலயங்களில் இயேசுவை தேடி பயனில்லை.
  • நிழலாய் இருப்பவரே

    May 06, 2020
    உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் - திருப்பாடல்கள் 91:1. ஆண்டவர் நமக்கு நிழலாயிருக்கிறார். உன்னதரின் நிழல் உலகம் தராத அமைதியை நமக்கு தரும். "தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார்." என்று இறைவாக்கினர் ஏசாயா கூறுகிறார்.
  • நம்மை காக்கும் கடவுள்

    May 06, 2020
    ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! - திருப்பாடல்கள்121:5. ஆண்டவர் நம்மை காக்கிறவர். அவர் கடைசிவரை பாதுகாக்கிறவர். அவர் இரக்கமும் அன்பும் உடைய கடவுள். நோயின் படுக்கையின் நேரத்திலும், போராட்டத்தின் மேல் போராட்டம் வந்து, அவற்றால் அமிழ்ந்து போகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் கவலை பட வேண்டாம். ஆண்டவர் நம்மை காப்பார்.
  • வழி நடத்தும் இறைவன்

    May 04, 2020
    நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? - எரேமியா 32:27. ஆண்டவர் அதிசயமாய் வழிநடத்துகிறவர். எகிப்து நாட்டிலே பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள் என கட்டளை இடுகிறான். இந்த கட்டளையினால் வந்த வேதனையை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசீர்வாதமாய் மாற்றினார். எந்த இடத்திலிருந்து கடுமையான சட்டம் பிறந்ததோ, அதே இடத்திலிருந்து பாசமான வார்த்தைகள் வரும்படி செய்தார்.
  • ஆண்டவரோடு நாம் இருந்தால்

    May 03, 2020
    உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார் - செப்பனியா 3:17. ஆண்டவரை அதிகாலையில் தேடுவோம். அவரை அன்பு செய்வோம். அவருக்கு விருப்பமான வாழ்வு வாழ்வோம். அப்படி நாம் செய்தால்...
  • 7 or 8 Think

    May 03, 2020
    We see 7 day in a week. We see 7 notes in music. But human body is of 8 and years of meaturity occuer maximum by 8. What is the link.

    To know it go to the video and watch it.
  • அருகில் இருக்க

    May 02, 2020
    குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள் - சீராக் 2:1. நாம் நம் வாழ்க்கையில் அதிகமாக சோதிக்கப் படுகிறோம். இந்த சோதனைகள் ஏன் என்று பார்த்தால்:
  • நம் நல்லாயனொடு

    May 02, 2020
    நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் - யோவான் 10:14. நல்ல ஆயன் என்று இயேசு சொல்வதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். ‘உங்களைக் கைவிடும் கூலிக்காரன் நான் அல்ல’. எந்நேரமும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்கிறார்.
  • வாழ்வு பெற

    Apr 29, 2020
    ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும் - உரோமையர் 8-5,6
  • மாற்றுரு பெறுவோம்

    Apr 29, 2020
    நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார் - லூக்கா 17:34. இந்த பகுதி முழுவதும் இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றியது. இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
  • நூறு மடங்காக

    Apr 27, 2020
    வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும் - மத்தேயு 13:45. உண்மையையும் இறைவனையும், அறிவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளும் ஒருவர் தான் நல்முத்துக்களை தேடி அலையும் வணிகர். தேடி அலைந்த அவர் எதிலும் மன நிறைவு அடையாதபடியால் மேலும் மேலும் தேடிக்கொண்டே இருக்கிறார்.
  • முன்னேறி செல்ல

    Apr 26, 2020
    அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்; அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்” - மீக்கா 2:13. வாழ்க்கையில் பிரச்சனைகள், தடைகள், போராட்டங்களைப் வரும் போது நாம் முயற்சியை விட்டுவிடுகிறோம். சோர்ந்து போகிறோம். ஆண்டவருடைய வல்லமையை விட, அவை பெரியவை கிடையாது. ஆகவே தடைகளைப் பார்க்காமல், தடைகளை தகர்த்து, பாதையை உண்டாக்கும், ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம். அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போனதில்லை.
  • வெற்றி காண

    Apr 25, 2020
    அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் - 1 சாமுவேல் 17:45.
  • ஜெபத்தோடு தியானித்திரு

    Apr 23, 2020
    சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார் - லூக்கா 2:34-35.
  • மகிழ்ச்சி நிரம்ப

    Apr 22, 2020
    அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார் - எபிரேயர் 12:14.
  • நிறை அன்போடு

    Apr 21, 2020
    இறைப்பற்றுள்ளோரிடம் ஆண்டவரின் கொடைகள் நிலைத்து நிற்கும்; அவரது பரிவு என்றும் வெற்றியைக் கொணரும் - சீராக் 11:17.
  • புகழ் பாடுங்கள்

    Apr 20, 2020
    பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள் - திருப்பாடல்கள் 47:6-7.