தூய ஆவியே என் ஆருயிரே
வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
விடுதலைப் பயணம் 23-20
நம் அனைவருக்கும் ஒரு காவல் தூதர் உண்டு. அவர் நம்மை காத்து வழி நடத்துவார். இயேசு விண்ணகத்துக்கு செல்லும் போது .“உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்று சொன்னார்.
அவர்முன் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவர் சொற்கேட்டு நடக்க வேண்டும்..
அப்படி அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.
எனவே நம் வாழ்வில் நம்மோடு வரும் தூய ஆவியார் நம்மை நேரிய வழியில் நடத்தி செல்வார். நம்மை தீங்குக்கு விலக்கி பாது காப்பார். அறிவு புகட்டுவர். ஆலோசனை கூறுவார். எனவே தூய ஆவியை வேண்டி ஜெபிப்போம்.
தூய ஆவியே என் ஆருயிரே என்னில் ஒளி ஏற்றி என்னை வழிநடத்தும். எனக்குத் திடன் அளித்து என்னைத் தேற்றும் .நான் செய்ய வேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உம் திரு சித்தத்தை தெரியப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று , நீர் விரும்புவதை அன்புடன் ஏற்று அடி பணிகிறேன். ஆமென்.