அன்பின் ஆண்டவரே
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.
விடுதலைப் பயணம் 20-2,6
நானே உன் கடவுள் உனக்கு வேறு தெய்வங்கள் இல்லை என்கிறார் ஆண்டவர். நாம் அவரை முழுமனதோடு அன்பு செய்தால், அவர் நம் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளின் பிள்ளைகளையும் அன்பு செய்வார். ஆசீர்வதிப்பார். அவர் நம்மை மட்டுமல்ல , நம்முடைய தலைமுறைகளையும் பேரன்பு செய்கிற இறைவன்.
ஆபிரகாம் ஆண்டவரை அதிகமாக நேசித்தார். ஆண்டவரோ அபிரகாமையும் அவர் வழித்தோன்றல்கள் யாவரையும் ஆசீர்வதித்தார். பெருக செய்தார். பாதுகாத்தார். பஞ்சம் , கொள்ளை நோய், எதிரிகளின் தாக்குதல்கள் எல்லாவற்றுக்கும் விலக்கி பாது காத்தார். அரசர்களும் ஞானிகளும், தலைவர்களும் அவர் வழித்தோன்றலில் வந்தார்கள்.
அந்த அன்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் அவரோடு தினமும் பேச வேண்டும். ஒரு நண்பனை போல பேச வேண்டும். . ஆவலுடன் ஆண்டருக்காக காத்திருப்போம். அவரும் நம் பக்கமாக திரும்பி நம் குரலை கேட்பார்.
ஆண்டவரே உமக்கு நன்றி. என்னை மட்டுமல்ல என் வழித்தோன்றல்களையும் ஆசீர்வதிப்பவரே உம்மை ஆராதிக்கிறோம். இன்றைய நாளில் நீர் எனக்கு செய்யவிருக்கும் எல்லாவற்றுக்கும் நன்றி ஆண்டவரே. எனக்கு திடனளித்து என்னை வழிநடத்தும். உம் திருசித்தப்படி என்னை நடத்தும் ஆமென்.