என் தஞ்சமே

அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

லூக்கா 1-39.

ஆவியால் நான் கருவுற்று இருக்கிறேன். நான் பேறு பெற்றவள் என்று மரியன்னை பெருமை கொள்ள வில்லை. அன்னை மரியா தாழ்ச்சியோடு தன் உறவினரை பார்க்க செல்கிறார்.  மனசு நிறைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார்.  அந்த வாழ்த்தை கேட்ட உடன்  எலிசபெத்து  வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். மரியன்னை யிடம் இருந்த தூய ஆவி எலிசபெத்தை யும் அவங்க வயிற்றில் இருந்த திரு முழுக்கு யோவானையும் ஆட்கொள்கிறார் .  

மரியன்னை சிலகாலம் அங்கு தங்கி இருந்து எலிசபெத் அம்மாவுக்கு உதவி செய்றாங்க.  ஆண்டவனின் தாய் தன்னை தாழ்த்தி பணிவிடை செய்கிறார்கள்.  இயேசு பணிவிடை செய்யவே வந்தேன் என்று பின்னாளில் சொன்னார். கடைசி இரவுணவின் போது பாதங்களை கழுவி முன்மாதிரி காட்டினார் . ஆனால் அவரை வயிற்றில் சுமந்த மரியன்னைக்கு பணிவிடை செய்யும் எண்ணமே இருந்தது.  .நானும் கருவுற்று இருக்கிறேனே என்று மரியன்னை நினைக்கவில்லை.   இயேசுவுக்கு முன்னமே அன்னை பணிவிடை செய்து  காட்டினார்

நாமும் அன்னையை நாடுவோம்.  ஆண்டவர் இயேசுவை தாங்கிய அந்த தாழ்ச்சியின் இருப்பிடம்,  தூய்மை உறைவிடம் நம்மையும் தூய்மைபடுத்தும். அன்னையிடம் தஞ்சம் என நம்மை ஓப்படைப்போம்.  

 

அம்மா மரியே உம்மையே தஞ்சம் என ஓடி வந்தோம்.அன்று நீர் வாழ்த்தியதும் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது போல தாயே எங்கள் பாவம் நீங்கி நாங்கள் தூய்மை அடையவும்,. எங்கள் செயல்கள்  மூலம்  பிறருக்கு நன்மை கிடைக்கவும், எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்க படவும்  உம் மகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.