என்னோடு இருப்பவரே!

பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;

எண்ணிக்கை 22-18.

ஆண்டவரை முழுவதுமாக நம்பி அவருடைய கட்டளைகளை மீறாமல் நடந்தால் அவர் நம்மை நேரிய வழியில் நடத்துகின்ற இறைவன். பிலயாமை அவர் நடத்தி செல்லுவதை பார்ப்போம்  .

இஸ்ரேல் மக்களை பழித்து சபிக்க சொல்லி மோவாப் மன்னன் பாலாக்கு பிலாயாமை அழைக்கிறார். பிலயாம் ஆண்டவரின் வார்த்தை படி போகவில்லை.  பின்னர் அரசனின் காட்டயத்தின் நிமித்தம் அவரிடம் போகிறார்.

 ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில்  நின்று கொண்டிருப்பதைக் கழுதை கண்டது; எனவே கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது; பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார்.

அடுத்து ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபுறமும் சுவர்களுள்ள ஒரு குறுகிய பாதையில் நின்றார்.

ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது; ஆதலால் அதை அவர் மறுபடியும் அடித்தார்.

பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார். ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார். 

உடனே ஆண்டவர் கழுதையை பேச வைக்கிறார்.  கழுதை  அவரிடம், “ இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” என்றது.

பிலயாம் கழுதையிடம், “நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்” என்றார்.

கழுதை பிலயாமிடம், “நான் உம் கழுதைதானே? ! எப்போதாவது நான் இப்படிச் செய்ததுண்டா?” என்றது, அதற்கு அவர், “இல்லை” என்றார்.

.ஆண்டவர் பிலயாமின் கண்களைத் திறக்க கையில் உருவிய வாளுடன் ஆண்டவரின் தூதர் பாதையில் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டார்;அவர்  அவரிடம்  என் பார்வையில் உன் வழி தவறானது என்று சுட்டி காட்டுகிறார்

பிலயாம் ஆண்டவரின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன்;  இது உம் பார்வையில் தீயதாக இருப்பின் நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றார்.

ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், “இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும் நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்” என்றார்.

.பிலயாம் பாலாக்கிடம், “இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்; நானாக எதையும் பேச இயலாது! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும்” 

கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்? என்று ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிகிரார்.

ஆண்டவர் நாம் விரும்பினால்  நம்மை நல்வழியில் நடத்துவார்.

 

 ஆண்டவரே  , என்னோடு இருப்பவரே, உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும். உம் நெறிகளை எனக்கு அறிவித்தருளும் .உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன்.  ஆமென்.